புதுடெல்லி: மலையாள எழுத்தாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் எம்.டி வாசுதேவன் நாயர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் (91) உடல் நலக் குறைவு காரணமாக இன்று இறந்தார். இவரது மறைவுக்கு தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி விடுத்துள்ள செய்தியில், “மலையாள திரைப்படம் மற்றும் இலக்கியத்தில் சிறந்து விளங்கிய எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் மறைவால் வருத்தம் அடைந்தேன். அவரது படைப்புகள், மனித உணர்வுகளை ஆழமாக ஆராய்ந்தவை. அவைகள் பல தலைமுறைகளை உருவாக்கியுள்ளன. இன்னும் பலரை தொடர்ந்து ஊக்குவிக்கும். பின்தங்கிய மக்களுக்காக அவர் குரல் கொடுத்தார். அவரது குடும்பத்தினர் மற்றும் அனுதாபிகளுக்கு எனது இரங்கல்கள். ஓம் சாந்தி” என குறிப்பிட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “எம்.டி.வாசுதேவன் நாயரின் மறைவு இலக்கிய உலகுக்கு மிகப் பெரிய இழப்பு. அவரது எழுத்தில் இந்திய கிராமிய வாழ்க்கை உயிர்ப்புடன் இருக்கும். அவரது குடும்பத்தினருக்கும், அனுதாபிகளுக்கும் எனது இரங்கல்கள்” என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago