புதுடெல்லி: குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டத்தில் உள்ள டிங்குச்சா கிராமத்தில் வசித்து வந்த குடும்பத்தை சேர்ந்த நான்கு இந்தியர்களின் உடல் கனடா எல்லையில் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரியில் கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து, குஜராத் அகமதாபாத் போலீஸார் நடத்திய விசாரணையில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த கல்வி நிறுவனத்தின் முதல்வர் பவேஷ் அசோக்பாய் படேல் மீது வழக்குப் பதிவு செய்தனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற விரும்பும் இந்தியர்களிடம் பவேஷ் ரூ.60 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு கனடா கல்லூரியில் சேர்க்கை பெறுவதற்காக மாணவர் விசாவை வாங்கி கொடுத்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, அமலாக்கத் துறையும் விசாரணையில்இறங்கியதையடுத்து, மும்பை மற்றும் நாக்பூரைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் லட்சக் கணக்கில் பணத்தைப் பெற்றுக்கொண்டு கனடா கல்லூரியில் இந்தியர்களுக்கு சேர்க்கை பெற்றுத்தருவதன் மூலமாக அமெரிக்க எல்லையை சட்டவிரோதமாக கடக்க உதவி வந்தது கண்டறியப்பட்டது.
அமலாக்கத் துறை கடந்த வாரம், மும்பை, நாக்பூர், காந்திநகர், வதோதரா உள்ளிட்ட 8 இடங்களில் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த இரண்டு கல்வி நிறுவனங்கள் 35,000 இந்தியர்களை ஒவ்வொரு ஆண்டும் கனடா கல்லூரிகளுக்கு பரிந்துரை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, பல்வேறு வங்கி கணக்குகளில் இருந்த ரூ.19 லட்சத்தை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago