அஜ்மீர் தர்காவுக்கு பிரதமர் மோடி சார்பில் புனித பூப்போர்வை அனுப்ப வேண்டாம்: இந்து சேனா அமைப்பு வலியுறுத்தல்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: ராஜஸ்​தானின் அஜ்மீர் நகரில் முஸ்​லிம்​களின் புகழ்​பெற்ற காஜா அஜ்மீர் ஷெரீப் தர்கா உள்ளது. இது மத்திய சிறு​பான்​மை​யினர் நல அமைச்​சகத்​தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால், ஒவ்வொரு வருட​மும் தர்கா​வின் உருஸ் விழாவுக்கு பிரதமர் மற்றும் எதிர்​க்கட்​சித் தலைவர்கள் புனித பூப்​போர்வை அனுப்பி வைப்பது வழக்​கம்.

இந்தவகை​யில் அஜ்மீர் தர்கா​வில் டிசம்பர் 28-ல் நிகழும் உருஸ் விழாவுக்கு பிரதமர் மோடி சார்​பில் புனித பூப்​போர்வை அனுப்பி வைக்​கப்பட உள்ளது. இதை பிரதமர் சார்​பில் சிறு​பான்​மை​யினர் நல அமைச்சர் கிரண் ரிஜிஜு நேரில் கொண்டு சென்று போர்த்த உள்ளார்.

இந்நிலை​யில் அஜ்மீர் தர்கா​வுக்கு பிரதமர் மோடி சார்​பில் பூப்​போர்வை அனுப் வேண்​டாம் என இந்து சேனா அமைப்பு வலியுறுத்​தி​யுள்​ளது. இந்துத்துவா அமைப்பு​களில் இந்து சேனா சார்​பில் அஜ்மீர் தர்கா மீது வழக்கு தொடுக்​கப்​பட்​டுள்ளதே இதற்கு காரணம். அஜ்மீர் சிவில் செஷன்ஸ் நீதி​மன்​றத்​தில் இந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தா கடந்த மாதம் தாக்கல் செய்த மனுவில், “இந்து கோயிலை இடித்து​விட்டு காஜா ஷெரீப் தர்கா கட்டப்​பட்​டுள்ள​தால் இதை கண்டு​பிடிக்க தர்காவினுள் களஆய்வு நடத்த வேண்​டும்” என்று கோரி​யிருந்​தார். இம்மனு தொடர்பாக மத்திய சிறு​பான்​மை​யினர் நல அமைச்​சகம், ராஜஸ்​தான் மாநில வஃக்பு வாரியம் உள்ளிட்ட அமைப்பு​களுக்கு நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ளது. வழக்கு ஜனவரி 24-ல் மீண்டும் விசா​ரணைக்கு வரவுள்​ளது.

இதனிடையே, மத்திய அரசின் வழிப்​பாட்டுத்​தலங்கள் பாது​காப்பு சட்டம் 1991-ஐ ரத்து செய்யக் கோரி தொடரப்​பட்ட வழக்கு உச்ச நீதி​மன்​றத்​தில் விசா​ரிக்​கப்​படு​கிறது. கடந்த மாதம் விசா​ரணைக்கு வந்த இவ்​வழக்​கில், மசூ​தி-கோ​யில் ​விவ​காரங்​களில் நாட்​டின் நீ​தி​மன்​றங்​கள் எந்த உத்​தர​வை​யும் பிறப்​பிக்க கூடாது என தடை ​வி​தித்​துள்​ளது.

இச்சூழலில் மசூதி - கோயில் மோதல்​களுக்கு இனி இடமில்லை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறி​யிருந்​தார். இதன் அடிப்​படை​யில் மத்திய அரசுக்கு பல்வேறு முஸ்​லிம் தரப்​பினர் ஒரு கோரிக்கை வைத்​துள்ளனர். இதில், “வழிபாட்டுத் தலங்கள் பாது​காப்பு சட்டத்​திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்​டும் என உச்ச நீதி​மன்ற நோட்​டீஸுக்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்​டும்” என்று கூறி​யுள்​ளனர்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்