கேரள அரசின் மொத்த வருவாயில் மது மற்றும் லாட்டரியின் பங்களிப்பு மட்டும் 25 சதவீதம் அளவுக்கு உள்ளது புள்ளிவிவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.
அம்மாநில சட்டப்பேரவையில் இது தொடர்பாக வழங்கப்பட்ட புள்ளிவிவரங்களில் கூறப்பட்டுள்ளதாவது: கேரள அரசின் வருவாயில் இரண்டு முக்கிய அங்கங்களாக மது மற்றும் லாட்டரி டிக்கெட் விற்பனை உள்ளது. கடந்த 2023-24-ம் நிதியாண்டில் கேரள மாநிலத்தின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.1,24,486.15 கோடியாக இருந்தது. இதில், மது மற்றும் லாட்டரி விற்பனையின் மூலமாக மட்டும் ரூ.31,618.12 கோடி பெறப்பட்டுள்ளது.
குறிப்பாக, மது விற்பனையின் வாயிலாக ரூ.19,088.86 கோடியும், லாட்டரி விற்பனை மூலமாக ரூ.12,529.26 கோடியும் வசூலாகியுள்ளன. மாநில அரசின் மொத்த வருமானத்தில் மது மற்றும் லாட்டரியின் மூலமாக பெறப்படும் வருவாய் நான்கில் ஒரு பங்காக உள்ளது. அதாவது மாநிலத்தின் மொத்த வருமானத்தில் இந்த இரண்டு வருவாய் மூலங்களின் பங்களிப்பு மட்டும் 25.4 சதவீதம் அளவுக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் பல்வேறு பொதுநல பணிகள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றுவதற்கு மது மற்றும் லாட்டரி விற்பனையிலிருந்து கிடைக்கும் வருவாய் மிக முக்கியமானதாக இருப்பது இந்த புள்ளிவிவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
31 mins ago
இந்தியா
36 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago