புதுடெல்லி: பாப்கார்ன் மீதான ஜிஎஸ்டி விகிதம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக இந்த விவகாரத்தில் முக்கிய மான 4 கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
கேள்வி 1. பாப்கார்ன் மீதான ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டுள்ளதா?
பதில்: சமீபத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பாப்கார்ன் மீதான ஜிஎஸ்டி விகிதம் உயர்த்தப்படவில்லை. உப்பு மற்றும் மசாலாப் பொருட்களுடன் கலந்த பாப்கார்னுக்கான ஜிஎஸ்டி விகிதத்தை தெளிவுபடுத்துமாறு உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து கோரிக்கை பெறப்பட்டது. இந்த விவகாரம் 55-வது ஜிஎஸ்டி கவுன்சிலின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு, அதை தெளிவுபடுத்த கவுன்சில் பரிந்துரைத்தது.
கேள்வி 2. பல்வேறு வகையான பாப்கார்னின் மாறுபட்ட வகைகளுக்கு என்ன அடிப்படை?
பதில்: உணவுப் பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களும் உலக சுங்க அமைப்பால் உருவாக்கப்பட்ட பல்நோக்கு சர்வதேச பொருட்களின் பெயரிடப்பட்ட ஹார்மோனைஸ்ட் சிஸ்டம் (ஹெச்.எஸ்) வகைப்பாட்டின்படி ஜிஎஸ்டி-ன் கீழ் வகைப்படுத்தப்படுகின்றன. சர்வதேச வர்த்தகத்தில் 98% க்கும் அதிகமானவற்றை உள்ளடக்கிய இந்த அமைப்புமுறை, 200 க்கும் மேற்பட்ட நாடுகளால் பயன்படுத்தப்படுகிறது. மாறுபட்ட ஜிஎஸ்டி விகிதங்கள் ஹெச்.எஸ் அமைப்புமுறையின் வெவ்வேறு அத்தியாயங்களின் கீழ் பொருட்களின் வகைப்பாட்டின் விளைவாகும்.
ஹெச்.எஸ் வகைப்பாட்டின் படி, இனிப்பு மிட்டாய், அத்தியாயம் 17 இல் ஹெச்.எஸ் 1704 இன் கீழ் இடம்பெற்றுள்ளது. சில குறிப்பிட்ட பொருட்களைத் தவிர அனைத்து இனிப்பு மிட்டாய்களுக்கும் 18% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இந்தியாவில், நம்கீன் வகை தின்பண்டங்கள் ஹெச்.எஸ் 2106 90 99 இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. முன் தொகுக்கப்பட்ட மற்றும் பெயர் பொறிக்கப்பட்ட வடிவத்தைத் தவிர வேறு வடிவத்தில் விற்கப்படும்போது 5% ஜிஎஸ்டி-யும், முன் தொகுக்கப்பட்ட மற்றும் பெயர் பொறிக்கப்பட்ட வடிவத்தில் விற்கப்படும்போது 12% ஜிஎஸ்டி-யும் நம்கீன்களுக்கு விதிக்கப்படும்.
கேள்வி 3. விளக்கத்தை வெளியிட்டதன் நோக்கம் என்ன?
பதில்: உப்பு மற்றும் மசாலாப் பொருட்களுடன் கலந்து, சாப்பிடத் தயாராக இருக்கும் பாப்கார்ன் குறித்த வகைப்பாடு சர்ச்சைகளுக்குத் தீர்வு காண விளக்கம் அளிக்குமாறு கவுன்சில் பரிந்துரைத்தது.
கேள்வி 4. திரையரங்குகளில் பாப்கார்ன் விற்பனை அதிகரிக்குமா?
பதில்: பொதுவாக, திரையரங்குகளில் வாடிக்கையாளர்களுக்கு தளர்வான முறையில் பாப்கார்ன் வழங்கப்படுகிறது. எனவே திரைப்பட காட்சிப்படுத்துதல் சேவையிலிருந்து சுயாதீனமாக வழங்கப்படும் வரை 'உணவக சேவைக்கு' பொருந்தக்கூடிய 5% தொடர்ந்து அமலில் இருக்கும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago