டங்ஸ்டன் சுரங்கம் குறித்து மறு ஆய்வு செய்ய ஜிஎஸ்ஐ-க்கு மத்திய அரசு பரிந்துரை: தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மதுரை மாவட்​டத்​தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது குறித்து மறு ஆய்வு செய்​யு​மாறு ஜிஎஸ்​ஐ-க்கு மத்திய அரசு பரிந்​துரை செய்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளி​யிட்​டுள்ள அறிவிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: மேலூர் அருகே​யுள்ள தெற்​குத் தெரு, முத்து​வேல்​பட்டி பகுதி​களில் டங்ஸ்​ட​னுக்கான புவி​யியல் குறிப்​பாணை (ஜிஎஸ்ஐ) 2021 செப். 14-ல் தமிழ்​நாடு அரசிடம் ஒப்படைக்​கப்​பட்​டது. அதேநேரத்​தில், டங்ஸ்டன் போன்ற முக்கிய கனிமங்களை ஏலம்விட மாநில அரசுக்கு அதிகாரம் வழங்​கப்​பட்​டது.

பின்னர், கனிமங்கள் சட்டத்​தில் சேர்க்​கப்​பட்ட பிரி​வின்​படி, முக்கிய கனிமங்கள் தொடர்பான சுரங்க குத்​தகைகளை​யும், கூட்டுஉரிமங்​களை​யும் பிரத்​தி​யேகமாக ஏலம் விட மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்​கப்​பட்​டது. இதனடிப்​படை​யில், நாயக்​கர்​பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதி உட்பட முக்கிய கனிம தொகு​திகளை ஏலம் விடுவது குறித்து தமிழக அரசுக்கு சுரங்க அமைச்​சகம் 15.9.2023-ல் கடிதம் எழுதி​யது. இதற்கு பதிலளித்த தமிழக நீர்​வளத் துறை அமைச்​சர், நாடாளு​மன்​றத்​தில் நிறைவேற்​றப்​பட்ட திருத்தச் சட்டத்தை கேள்விக்​குள்​ளாக்​கியதுடன், முக்கிய கனிமங்களை ஏலம் விடும் அதிகாரம் மாநில அரசிடம் இருக்க வேண்​டும் என்றார்.

2021-2023-ல் முக்கிய கனிமங்களை ஏலம் விடும் அதிகாரம் அரசுக்கு இருந்த​போது, தமிழ்​நாடு எதுவும் செய்ய​வில்லை. குறிப்​பாக, ஏல நடைமுறை அமலுக்கு வந்த பிறகு, கடந்த 9 ஆண்டு​களில் தமிழகத்​தில் ஒரு பெரிய கனிமத்​தொகு​திகூட ஏலம் விடப்​பட​வில்லை. நிலச் சட்டத்​தின்படி மத்திய அரசு முக்கிய கனிமங்களை ஏலம் விடும் நடவடிக்கைகளை மேற்​கொள்​ளும் என்று தமிழக அமைச்​சருக்கு பதில் அளித்த பின்னர், சுரங்க அமைச்​சகத்​தின் செயலா​ளர், தமிழ்​நாடு தலைமைச் செயலா​ள​ருக்கு 6-12-2023-ல் நாயக்​கர்​பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதி உட்பட ஏலத்​துக்கு விடப்​பட​வுள்ள 3 முக்​கியமான கனிமத் தொகு​தி​களின் விவரங்களை கடிதம் மூலம் கோரினார்.

தமிழ்​நாடு புவி​யியல், சுரங்கத் துறை ஆணையர் 8.2.2024 தேதி​யிட்ட கடிதத்​தில், நாயக்​கர்​பட்டி தொகுதி உட்பட இந்த மூன்று பகுதிகள் குறித்த விவரங்களை அளித்​துள்ளார். எனினும், 193.215 ஹெக்​டேர் பரப்​பள​வில் (கனிமத் தொகு​தி​யின் மொத்த பரப்​பள​வில் சுமார் 10%) பல்லு​யிர் தளம் இருப்​பதாக மாநில அரசு தெரி​வித்​தா​லும், இந்த கனிமத் தொகு​தியை ஏலம் விடு​வதற்கு எதிராகப் பரிந்​துரைக்க​வில்லை. 2024 பிப்​ரவரி முதல் 2024 நவம்பர் வரை சுரங்க அமைச்​சகத்​தின் ஏலம் தொடர்பான கூட்​டங்​களில் தமிழகம் கலந்​து​கொண்ட போதி​லும், ஏலம் குறித்து எந்த எதிர்ப்பும், கவலை​யும் தெரிவிக்க​வில்லை.

முக்கிய கனிமங்களை ஏலம் விடுவது மட்டுமே சுரங்க அமைச்​சகத்​தின் பணியாகும். அதன்​பிறகு, விருப்பக் கடிதம் வழங்​குதல், கூட்டு உரிமம், சுரங்கக் குத்தகை ஆகியவை மாநில அரசால் மேற்​கொள்​ளப்​படு​கின்றன. தேவைப்​பட்​டால், கூட்டு உரிமம் அல்லது சுரங்கக் குத்தகை கையெழுத்​திடு​வதற்கு முன்பு பகுதியை மாற்றியமைக்​கலாம். உற்பத்தி தொடங்​கிய​வுடன், அனைத்து வருவா​யும் மாநில அரசுக்​குச் சேரும்.

எனினும், ஏலதாரர் அறிவிக்​கப்​பட்ட பிறகு, வட்டாரப் பகுதிக்​குள் ஒரு பல்லு​யிர் பாரம்​பரியத் தளம் இருப்​ப​தைக் காரணம் காட்டி, இந்த கனிமத் தொகு​தியை ஏலம் விடு​வதற்கு எதிராக பல முறை​யீடுகள் பெறப்​பட்​டுள்ளன. எனவே, கனிமத் தொகு​தியை மறு ஆய்வு செய்து, பல்லு​யிர் பெருக்க தளப் பகுதியை தொகு​தியி​லிருந்து விலக்கி, தொகுதி எல்லையை மறுவரையறை செய்​வதற்கான சாத்​தி​யக்​கூறுகளை ஆராயு​மாறு ஜிஎஸ்ஐ கேட்டுக் கொள்​ளப்​பட்​டுள்​ளது.

மேலும், நாயக்​கர்​பட்டி டங்ஸ்​டன் க​னிமத் தொகு​தி​யில் ஒப்​பந்​தப்புள்ளி கோரும் ஒப்​பந்​த​தா​ரருக்கு ஒப்பு​தல் கடிதம் வழங்​கும் நடை​முறையை தற்​போதைக்கு நிறுத்தி வைக்​கு​மாறு தமிழ்​நாடு அரசு கேட்டுக் ​கொள்​ளப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அ​தில்​ தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்