அம்பேத்கர் பற்றிய அமித் ஷா கருத்தில் நிதிஷ் மவுனம்: பிஹாரில் மீண்டும் கூட்டணி மாறுவதாக சர்ச்சை

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: நாடாளு​மன்​றத்​தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்பேத் கர் பற்றி கூறிய கருத்து சர்ச்​சை​யானது. அவரது பேச்சை எதிர்க்​கட்​சி​யினர் கண்டித்து வருகின்​றனர். அதேநேரத்​தில், அமித் ஷா கருத்​துக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யின் (என்​டிஏ) தலைவர்​கள்கள் ஆதரவாக பேசி வரு கின்​றனர். மேலும், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் அமைதி காக்​கிறார். இதனால் அவர் மீண்​டும் கூட்டணி மாறு​வாரா என்ற கருத்து எழுந்​துள்ளது.

பிஹாரில் என்டிஏ தலைமை கட்சியாக ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) உள்ளது. இதன் தலைவர் நிதிஷ்கு​மார் முதல்​வ​ராக​வும் இருக்​கிறார். இங்கு ஜேடி​யுவை விட அதிக தொகுதிகள் பெற்றும் பாஜக துணை முதல்வர் பதவி​யில் மட்டுமே உள்ளது. இதேபோல் மகாராஷ்டிரா​விலும் சிவசேனா​வின் ஏக்நாத் ஷிண்டே முதல்​வராக இருந்​தார். சமீபத்​தில் நடந்த சட்டப்​பேரவை தேர்​தலில் பாஜக அதிக தொகு​திகள் பெற்​ற​தால், அக்கட்​சியை சேர்ந்த தேவேந்திர பட்னா​விஸ் முதல்​வ​ரானார். ஏக்நாத் ஷிண்டே துணை முதல்​வ​ரானார்.

இந்நிலை​யில், அடுத்த ஆண்டு அக்டோபரில் பிஹார் சட்டப்​பேர​வைக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில், பாஜக தனித்து நிற்​கும் எனவும், முதல்வர் நிதிஷ் ஒதுக்​கப்​பட்டு விடு​வார் என்றும் பல்வேறு பேச்​சுக்கள் உலவு​கின்றன. இதன் காரண​மாகவே, அமைச்சர் அமித் ஷா அம்பேத் கர் பற்றி கூறிய கருத்து தொடர்பாக முதல்வர் நிதிஷ்குமார் மவுனம் சாதிப்​பதாக கூறப்​படு​கிறது. இத்துடன், முதல்வர் நிதிஷ்குமார், மீண்​டும் என்டிஏவை விட்டு லாலு​வின் மெகா கூட்​ட​ணிக்கு செல்​லும் வாய்ப்புகள் இருப்​ப​தாக​வும் சர்ச்சை கிளம்​பி​யுள்​ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் ஜேடியு நிர்​வாகிகள் கூறும்​போது, “பாஜக, ஜேடியு மற்றும் லாலு​வின் ஆர்ஜேடி என முக்கோண அரசியல் பிஹாரில் உள்ளது. இந்த மூன்​றில் ஒன்று சேரும் இரு கட்சிகளே ஆட்சி அமைக்​கும் நிலை உள்ளது. எனவே, மகாராஷ்டிராவை போல், பிஹாரில் பாஜக முடிவு எடுக்க முடி​யாது. தனது உடல்​நிலை காரண​மாகவே நிதிஷ் அமைதி காக்​கிறாரே தவிர கூட்டணி மாறும் பேச்​சுகள் அனைத்​தும் புரளி​யே” என்றனர்.

இதனிடையே, உடல்நல குறைவு காரணமாக ஒத்தி​வைத்​திருந்த பிரகதி யாத்​திரையை முதல்வர் நி​திஷ்கு​மார் நேற்று தொடங்​கினார். இந்த ​யாத்​திரை​யின் ​போது நி​திஷ் ஏ​தாவது பேசினால்​தான், அவர் தொடர்பான சர்ச்​சைக்கு ​முடிவு தெரி​யும் என்​று அவர்கள் தெரிவித்தனர்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்