திரிபுராவில் புலம் பெயர்ந்து வசிக்கும் புரு பழங்குடியின மக்களை சந்தித்த மத்திய அமைச்சர் அமித் ஷா, அரசின் நலத்திட்டங்கள் கிடைக்கிறதா என கேட்டறிந்தார்.
மத்திய உள் துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா திரிபுரா கடந்த 21-ம் தேதி சென்றிருந்தார். தலைநகர் அகர்தலாவில் நடைபெற்ற வடகிழக்கு கவுன்சிலின் 72-வது கருத்தரங்கில் பங்கேற்றார். இதையடுத்து, 22-ம் தேதி தலாய் மாவட்டத்தில் புருஹ பாரா கிராமத்துக்கு சென்ற அவர், அங்கு வசிக்கும் புரு பழங்குடியின மக்களை சந்தித்துப் பேசினார். குறிப்பாக, 2020-ல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி மறுகுடியமர்வு திட்டம் சரியாக செயல்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்தார்.
அப்போது, “ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் 35 கிலோ அரசி கிடைக்கிறதா, எடை சரியாக இருக்கிறா, அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு அட்டை கிடைத்ததா, இங்கு உள்ள பள்ளியில் ஆசிரியர்கள் இருக்கிறார்களா” என அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தார்.
இதற்கு, மத்திய அரசு தனது வாக்குறுதியை செயல்படுத்தியதற்காக புரு இன மக்கள் பாராட்டு தெரிவித்தனர். பின்னர் அமித் ஷா கூறும்போது, “உங்களைவிட நான் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களுக்கு திரிபுராவில் தங்க நிரந்தர இடம் கிடைத்ததற்காக பிரதமர் மோடியும் மகிழ்ச்சி அடைந்தார்” என்றார்.
» சகோதரர் வீட்டில் ரூ.1.2 கோடி கொள்ளையடித்த தம்பி ஹைதராபாத்தில் கைது
» அயோத்தி ராமர் கோயில் முதலாம் ஆண்டு விழா: ஜனவரி 11 முதல் 3 நாள் கொண்டாட திட்டம்
இந்த சந்திப்பின்போது சிலர் தங்கள் குறைகளை தெரிவித்தனர். அவற்றுக்கு உடனடியாக தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தரவிட்டார்.
மிசோரம் மாநிலத்தில் கடந்த 1997-ம் ஆண்டு மிசோ மற்றும் புரு-ரியாங் பழங்குடியின மக்களுக்கு இடையே கலவரம் மூண்டது. இதன் காரணமாக அங்கு வசித்த பெரும்பாலான புரு பழங்குடியின மக்கள் அருகில் உள்ள திரிபுரா மாநிலத்தில் தஞ்சமடைந்தனர். அவர்கள் முகாம்களில் வசித்து வந்தனர். நிரந்தரமாக வசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு மிசோரம், திரிபுரா மாநில அரசுகள், மத்திய அரசு, மிசோரம் புரு புலம்பெயர் மக்கள் அமைப்புக்கு இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, புலம்பெயர்ந்த 6,958 புரு பழங்குடியின குடும்பத்தினர் (38,000 பேர்) திரிபுராவில் 12 இடங்களில் நிரந்தரமாக தங்க வீடு கட்டிக் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. அத்துடன் அவர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள், நிதியுதவி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago