புதுடெல்லி: டெல்லியில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, ஆம் ஆத்மி அரசு மீது குற்றப்பத்திரிகையை வெளியிட்டது பாஜக.
டெல்லியில் கடந்த 10 ஆண்டு களாக ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி, 3-வது முறையாக ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக உள்ளது. அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சியுடனோ அல்லது எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியுடனோ இணைந்து போட்டியிட மாட்டோம். தனித்தே போட்டியிடுவோம் என்று கேஜ்ரிவால் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக குற்றப்பத்திரிகையை பாஜக முன்னாள் அமைச்சர் அனுராக் தாக்குர் டெல்லியில் நேற்று வெளியிட்டார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அனுராக் தாக்குர் கூறியதாவது: ஆம் ஆத்மி அரசு யமுனை நதியை மோசமான அளவுக்கு மாசுபடுத்தி உள்ளது. யமுனை நதியில் துர்நாற்றம் வீசுகிறது, நுரையாக இருக்கிறது, நச்சுத்தன்மை கொண்டதாக மாறிவிட்டது. கடந்த 2022-ம் ஆண்டு செய்தியாளர்கள் சந்திப்பில் அர்விந்த் கேஜ்ரிவால் பேசும்போது, “அடுத்த தேர்தலுக்குள்(2025) நானும் மக்களும் யமுனை நதியில் மூழ்கி எழுவோம்” என்று
கூறினார்.
ஆம் ஆத்மி பதவியேற்று 10 ஆண்டுகள் முடிந்துவிட்டன. யமுனை நதி தூய்மையானதா? டெல்லியில் காற்று மாசு மிகவும் அபாயகரமான 500 ஏகியூஐ அளவை தாண்டிவிட்டது. டெல்லியில் மக்களுக்கு அத்தியாவசியமான தண்ணீர் கிடைக்கவில்லை. பிரதமர் மோடியின், ‘ஜல் ஜீவன்’ திட்டம் ஒவ்வொருவருக்கும் தண்ணீரை உறுதி செய்துள்ளது. ஆனால், டெல்லியில் அந்தத் திட்டத்தை அமல்படுத்த ஆம் ஆத்மி அரசு தயாராக இல்லை.
» ஜெய்ஷ் தீவிரவாதிகளுடன் பாகிஸ்தான் உறவு: பிரெஞ்சு இதழில் அதிர்ச்சி தகவல்கள்
» வங்கதேச இந்துக்கள் மீது தாக்குதலை நிறுத்த முன்னாள் நீதிபதிகள், தூதர்கள் 685 பேர் கடிதம்
டெல்லியை கேஜ்ரிவாலின் ஊழல், மாசுபாட்டில் இருந்து காப்பாற்ற வேண்டும். டெல்லியில் ஊழல் மலிந்து கிடக்கிறது. குடிநீர் வாரிய ஊழல், பள்ளி வகுப்பறை ஊழல், மெகலா கிளினிக் ஊழல், வக்பு வாரிய ஊழல், மதுபான ஊழல், டிடிசி ஊழல்... இப்படி பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. டெல்லியில் ஊழல்வாதிகளின், கிரிமினல்களின் நண்பராக அர்விந்த் கேஜ்ரிவால் இருக்கிறார். அவரை நாங்கள் மன்னிக்க மாட்டோம். இவற்றை எல்லாம் நாங்கள் சுத்தப்படுத்துவோம். இவ்வாறு அனுராக் தாக்குர் கூறினார்.
இதுகுறித்து கேஜ்ரிவால் கூறும்போது, “டெல்லி தேர்தலில் போட்டியிடுவதற்கு அவர்களிடம் எந்த திட்டமும் கொள்கையும் இல்லை. ஐந்து ஆண்டுகளில் டெல்லிக்கு பாஜக என்ன செய்தது என்பதை அவர்கள் சொல்ல வேண்டும். ஆனால், டெல்லி மக்களுக்காக மின்சாரம், தண்ணீர், பெண்கள் இலவச போக்குவரத்து, சாலைகள் என பல்வேறு திட்டங்களை ஆம் ஆத்மி அமல்படுத்தி உள்ளது. டெல்லியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. இப்போது அவர்கள் தேர்தலுக்காக வருகிறார்கள். அவர்களிடம் முதல்வர் வேட்பாளர் என்று யாரும் இல்லை” என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago