வங்கதேசத்தினர் ஊடுருவல்: டெல்லி போலீஸ் நடத்திய சோதனையில் சந்தேக நபர்கள் 170 பேர் சிக்கினர்

By செய்திப்பிரிவு

டெல்லியில் போலீஸார் நடத்திய சோதனையில் வங்கதேச ஊடுருவல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் 170 பேர் சிக்கினர். இவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.

டெல்லியின் பல பகுதிகளில் வங்கதேசத்தை சேர்ந்த பலர் எந்த ஆவணமும் இன்றி தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இது குறித்து போலீஸார், வெளிநாட்டினர் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்த, டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா உத்தரவிட்டார். இதையடுத்து டெல்லி போலீஸார் மற்றும் வெளிநாட்டினர் பிரிவு அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழு டெல்லியில் பல இடங்களில் வீடு வீடாக சென்று சோதனை நடத்தியது. இதில் முறையான ஆவணங்கள் இன்றி சுமார் 175 பேர் தலைநகரில் வசிப்பது கண்டறியப்பட்டது. இவர்களிடம் தீவிர விசாரணை நடைபெறுகிறது.

இவர்களில் சிலர் தங்கள் சொந்த ஊராக வேறு மாநிலங்களில் உள்ள இடங்களை கூறியுள்ளனர். அங்கு சிறப்பு குழுக்களையும் அனுப்பியும், உள்ளூர் போலீஸ் உதவியுடனும் ஆவணங்கள் சரிபார்க்கப்படுகின்றன. இதில் கிடைக்கும் தகவல் அடிப்படையில் சந்தேக நபர்கள் 170 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் வங்கதேசத்தினர் என தெரியவந்தால், அவர்கள் வங்கதேசத்துக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்