கிறிஸ்துமஸ் சந்தைக்குள் கார் மோதி தாக்குதல்: ஜெர்மனியில் காயமடைந்த 7 இந்தியர்களுக்கு மத்திய அரசு உதவி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜெர்​மனி​யில் மருத்​துவர் ஒருவர் கிறிஸ்​துமஸ் சந்தை​யில் காரை மோதி நடத்திய தாக்​குதலில் இந்தி​யர்கள் 7 பேர் படுகாயம் அடைந்​துள்ளனர். அவர்​களுக்கு தேவையான உதவிகளை இந்திய தூதரகம் செய்து வருகிறது.

ஜெர்​மனி​யின் மேக்​டேபர்க் நகரில் கிறிஸ்​துமஸ் பண்டிகைக்​காக, மிகப்​பெரிய ஷாப்​பிங் மார்க்​கெட்​டில் கடந்த வெள்​ளிக்​கிழமை மக்கள் கூட்டம் அதிகமாக இருந்​தது. அப்போது ஒரு கார் அதிவேகமாக வந்து சாலை​யில் செல்​வோர் மீது மோதி​யபடி நிற்​காமல் சென்​றது. இதில் குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்​தனர். 60-க்​கும் மேற்​பட்​டோர் படுகாயம் அடைந்​தனர். அவர்​களில் பலருடைய நிலைமை கவலைக்​கிடமாக உள்ளது.

சவுதி மருத்துவர்: காரை தாறு​மாறாக ஓட்டி தாக்​குதல் நடத்​தி​ய​வர், சவுதி அரேபி​யாவை சேர்ந்த மனநல மருத்​துவர் தலேப் (50) என தெரிய வந்துள்ளது. அவரை போலீ​ஸார் கைது செய்து விசா​ரித்து வருகின்​றனர். இந்நிலை​யில் காரை மோதி நடத்திய தாக்​குதலில் இந்தி​யர்கள் 7 பேர் படுகாயம் அடைந்​துள்ளனர். அவர்​களில் 3 பேர் சிகிச்​சைக்​குப் பிறகு மருத்​துவ​மனை​யில் இருந்து டிஸ்​சார்ஜ் செய்​யப்​பட்​டனர். மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்​சை​யில் உள்ளனர்.

காயம் அடைந்த இந்தி​யர்​களின் குடும்பத்​தினரை பெர்​லினில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை செய்துவருகின்​றனர் என்று மத்திய வெளி​யுறவுத் துறை அமைச்​சகம் நேற்று தெரி​வித்​தது.

இதுகுறித்து வெளி​யுறவுத் துறை அமைச்​சகம் வெளி​யிட்ட அறிக்கை​யில், ‘‘ஜெர்​மனி​யில் நடத்​தப்​பட்ட தாக்​குதலை வன்மையாக கண்டிக்​கிறோம். 5 பேரின் உயிர்கள் பறிக்​கப்​பட்​டுள்ளன. பலர் காயம் அடைந்​துள்ளனர். பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்காக பிரார்த்தனை செய்​கிறோம். காயம் அடைந்த இந்தி​யர்​கள், அவர்​களது குடும்பத்​தினருக்கு வேண்டிய உதவிகள் செய்​யப்​படு​கின்​றன’’ என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்தத் தாக்​குதலுக்கு சவுதி அரேபிய அரசும் கண்டனம் தெரி​வித்​துள்ளது. ஜெர்மனி மக்கள் மற்றும் அரசுக்கு முழு ஆதரவு அளிப்​பதாக சவுதி தெரி​வித்​துள்ளது. 8 ஆண்டு​களுக்கு முன்கடந்த 8 ஆண்டு​களுக்கு முன்னர் ஜெர்​மனி​யில் இதே போல் டிரக் ஒன்றை தீவிரவாதி தாறு​மாறாக ஓட்டி சென்று தாக்​குதல் நடத்​தினார். இதில் 13 பேர் உயி​ரிழந்​தனர். பலர் ​கா​யம் அடைந்​தனர். பின்னர் இத்​தாலி​யில் அந்​தத் தீ​விர​வா​தியை ​போலீ​ஸார் சுட்டுக் ​கொன்றது குறிப்​பிடத்​தக்​கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்