மொஹாலி: பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நேற்று (சனிக்கிழமை) மாலை 4 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இமாச்சலப்பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது பெண் உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் ஒருவர் தியோக்கைச் சேர்ந்த த்ரிஷ்டி வர்மா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இடிபாடுகளுக்கு இடையே இருந்து நேற்றிரவு மீட்கப்பட்டு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டாலும், படுகாயங்கள் காரணமாக அவர் உயிரிழந்தார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. அவர் பெயர் அபிஷேக் என்றும் ஹரியானா மாநிலம் அம்பாலாவைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில், இந்திய ராணுவத்தினரும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் 17 மணிநேரங்களுக்கு மேலாக தீவிரமாக முயன்று வருகின்றனர். 60 சதவீத இடிபாடுகள் அகற்றப்பட்டுவிட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கட்டிட விபத்துக் குறித்து மூத்த காவல்துறை அதிகாரி தீபக் பரீக் கூறுகையில், "முதல்கட்ட விசாரணையில், கட்டிடத்தின் உரிமையாளர்கள் எந்த விதமான முன் அனுமதியும் இல்லாமல் அருகில் இருந்த நிலத்தில் குழி தோண்டியுள்ளார். கட்டிட உரிமையாளர்களான பர்விந்தர் சிங் மற்றும் ககன்தீப் சிங் இருவர் மீதும் பாரதீய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 105ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
விபத்துக்குறித்தும், மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தொலைபேசி வழியாக நிலைமையை கண்காணித்து வருதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே இந்தத் துயரச் சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்து பஞ்சாப் முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மொஹாலி அருகே பல மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளதாக துயரமான செய்தி ஒன்றினை அறிந்தோம். மொத்த நிர்வாகமும் மற்ற மீட்புக்குழுக்களும் அங்கு மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன. நான் நிர்வாகத்துடன் தொடர்பில் இருந்து நிலைமையை கேட்டறிந்து வருகிறேன். உயிரிழப்புகள் ஏற்படக்கூடாது என்று நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் நிர்வாகத்துடன் ஒத்துழைப்பு வழங்கும்படி வேண்டிக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
59 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago