ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார் 

By செய்திப்பிரிவு

ஹரியானா: இந்திய தேசிய லோக் தளம் (INLD) கட்சித் தலைவரும், ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சவுதாலா மாரடைப்பு காரணமாக வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 89.

ஹரியானா மட்டுமல்லாமல் தேசிய அரசியலிலும் முக்கியத்துவம் வாய்ந்தவர் ஓம் பிரகாஷ் சவுதாலா. இவர் முன்னாள் துணைப் பிரதமர் சவுத்ரி தேவி லாலின் மகன். ஹரியானாவின் முதல்வராக 5 முறை பதவி வகித்தவர் ஓம் பிரகாஷ். 1989 டிசம்பரில் இவர் ஜனதா தளத்தின் உறுப்பினராக இருந்தபோது முதன்முறை முதல்வராக பதவியேற்றார். ஜூலை 1990 மற்றும் ஏப்ரல் 1991 ஆகிய ஆண்டுகளில், சவுதாலா இரண்டு முறை குறுகிய கால முதல்வராக பதவி வகித்தார். அதனைத் தொடர்ந்து இந்திய தேசிய லோக் தளம் கட்சியில் இணைந்த பின், ஜூலை 1999 முதல் 2005 வரை தொடர்ந்து இரண்டு முறை ஹரியானா முதல்வராக பதவி வகித்தார்.

ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு அபய் சிங் சவுதாலா மற்றும் அஜய் சிங் சவுதாலா ஆகிய மகன்கள் உள்ளனர்.அவரது பேரன் துஷ்யந்த் சவுதாலா ஹரியானாவின் முன்னாள் துணை முதல்வராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு அவரது குருகிராம் இல்லத்தில் மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை மதியம் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

49 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்