பெங்களூரு கர்நாடகாவில் அரசு தொடக் கப்பள்ளி மாணவர்கள் 250 கி.மீ. தூரம் பயணித்து வந்து, முதல்வர் குமாரசாமியிடம் மனு கொடுத்து மூடப்பட்ட தங்களது பள்ளியை மீண்டும் திறக்கச் செய்துள்ளனர். இந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் சித்ரதுர்கா மாவட்டம் அலகட்டா கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 43 மாணவர்கள் படித்து வந்தனர். இந்நிலையில் மாணவர்களின் எண்ணிக்கையை காரணம் காட்டி கடந்த 16-ம் தேதி இந்தப் பள்ளியை மூட அரசு உத்தரவிட்டது. இதனால் அங்கு படித்து வந்த 43 மாணவர்களும் 15 கி.மீ. தொலைவில் பராமசாகராவில் உள்ள பள்ளிக்கு மாற்றப்பட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் பள்ளிச் சீருடையில் கடந்த 25-ம் தேதி மாலை அலகட்டா கிராமத்தில் இருந்து 250 கி.மீ. தூரமுள்ள பெங்களூருவுக்கு பஸ்ஸில் புறப்பட்டனர். மறுநாள் காலை 6 மணிக்கு பெங்களூருவில் உள்ள முதல்வர் குமாரசாமியின் கிருஷ்ணா இல்லத்துக்கு வந்தனர். அப்போது முதல்வர் அங்கு இல்லாததால் சுமார் 5 மணி நேரம் காத்திருந்தனர்.
11 மணியளவில் குமாரசாமி வந்ததும், அவரை சந்தித்து மனு அளித்தனர். அப்போது, பள்ளி மூடப்பட்டால் தங்களுக்கு ஏற்படும் சிரமங்களை விவரித்தனர்.
இதனை பொறுமையாக கேட் டறிந்த முதல்வர் குமாரசாமி, உங்களது பள்ளி மீண்டும் திறக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து அந்த மாணவர்கள் தங்கள் சொந்த ஊருக்குப் புறப்பட்டனர். இந்நிலையில் அலகட்டாவில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியை மீண்டும் திறக்க நேற்று முன்தினம் அரசாணை வெளியிடப்பட்டது.
மூடப்பட்ட அரசுப் பள்ளியைத் காப்பாற்ற 250 கி.மீ. தூரம் பயணித்து வந்த மாணவர்களின் செயலை சமூக ஆர்வலர்களும், கல்வியாளர்களும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
இதுகுறித்து மாணவி நவீனா கூறியபோது, ‘‘எங்கள் பகுதியில் ஏராளமான தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. அரசுப் பள்ளி மாணவர்களை தனியார் பள்ளிகள் இழுப்பதால் எங்கள் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. மீண்டும் பள்ளி செயல்பட முதல்வர் உறுதியளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 min ago
இந்தியா
45 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
2 days ago