மும்பை: மும்பை கடற்கரை பகுதியில் சுற்றுலா படகு மீது கடற்படையின் விரைவு ரோந்துப் படகு மோதியவிபத்தில் காணாமல்போன இருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மும்பையின் ‘கேட் வே ஆப் இந்தியா’ பகுதியில் இருந்து பிரபல சுற்றுலா தலமான எலிபென்டா தீவு நோக்கி ‘நீல்கமல்’ என்ற சுற்றுலா படகு நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. இப்படகில் 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இருந்தனர். அப்போது அப்பகுதியில் கடற்படையின் விரைவுப் படகு இன்
ஜின் சோதனையில் ஈடுபட்டிருந்தது. அதில் கடற்படை மாலுமிகள் மற்றும் படகு தயாரிப்பு நிறுவன ஊழியர்கள் என மொத்தம் 6 பேர் இருந்தனர்.
இந்நிலையில் விரைவுப் படகு திடீரென கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா படகு மீது மோதியது. இதில் சுற்றுலா படகு சேதம் அடைந்து கடலில் கவிழ்ந்தது. இதையடுத்து கடலோர காவல் படை மற்றும் மெரைன் போலீஸ் உதவியுடன் கடற்படை மீட்புப் பணியில் ஈடுபட்டது. 4 ஹெலிகாப்டர்கள் மற்றும் 15 படகுகள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இந்த விபத்தில் சுற்றுலா படகில் வந்த 10 பேர், கடற்படை மாலுமி ஒருவர், விரைவுப் படகு தயாரிப்பு நிறுவனத்தின் ஊழியர்
கள் இருவர் என மொத்தம் 13 பேர்உயிரிழந்தனர்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “இரு படகிலும் மொத்தம் 113 பேர் இருந்தனர். இவர்களில் உயிரிழந்த 13 பேரும் காயமடைந்த இருவர் உள்ளிட்ட 98 பேரும் மீட்கப்பட்டனர். ஹன்ஸ் ராஜ் பாட்டி (43), ஜோகன் முகம்மது நிசார் அகமது பதான் (11) ஆகிய இருவரை காணவில்லை” என்றார். இந்நிலையில் இவர்
களை தேடும் பணி நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்றது. இதில் கடற்படை மற்றும் கடலோர காவல் படையின் 8 படகுகள் ஈடுபட்டிருந்தன.
» மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸுடன் உத்தவ் சந்திப்பு: என்டிஏ கூட்டணியில் இணைய ரகசிய பேச்சு?
படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இது போல மகாராஷ்டிர அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. கடற்படை சார்பில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கடற்படை விரைவுப்படகின் மாலுமி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago