ஜம்முவின் கதுவா நகரில் வீட்டில் தீப்பற்றியதில் ஓய்வுபெற்ற டிஎஸ்பி மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயம் அடைந்தனர்.
ஜம்மு காஷ்மீர் காவல் துறையில் டிஎஸ்பியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் அவதார் கிரிஷன் ரைனா (81). இவர் தனது குடும்பத்துடன் ஜம்மு பிராந்தியம், கதுவா நகரின் ஷிவ் நகர் பகுதியில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் இவரது வீடு தீப்பற்றி எரிவதை கண்டு அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து நடைபெற்ற தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியில் அவதார் ரைனா, அவரது மகள் பர்கா ரைனா, மகன் தாகாஷ், கங்கா பகத், 15 வயது தானிஷ் பகத், 6 வயது அத்விக் ஆகிய 6 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் அவதார் ரைனாவின் மனைவி ஸ்வர்ணா (61), நீத்து தேவி (40), அருண் குமார் (15) மற்றும் 69 வயது பெண் ஒருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
» அயோத்தியில் மசூதி கட்ட வழங்கிய நிலத்தை திரும்பப் பெற பாஜக பிரமுகர் உ.பி. முதல்வரிடம் கோரிக்கை
இதுகுறித்து கதுவா மருத்துவக் கல்லூரி முதல்வர் எஸ்.கே.அத்ரி கூறுகையில், “கரும் புகையால் மூச்சுத்திணறி 6 பேரும் இறந்துள்ளனர். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்படும்" என்றார். இந்த சம்பவம் தொடர்பாக கதுவா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில், “கதுவா நகரின் ஷிவ் நகர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் பற்றி அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். இவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்பில் இருந்து வருகிறேன். பாஜக மண்டல தலைவர் ராகுல் தலைமையிலான கட்சித் தொண்டர்கள் அங்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago