அம்பேத்கருக்கு எதிராக காங். செய்த தீங்குகள் பற்றி பட்டியல் - அமித் ஷாவுக்கு ஆதரவாக களமிறங்கிய மோடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தாங்கள் இத்தனை ஆண்டுகளாக அம்பேத்கரை அவமதித்த செயல்களை தீங்கிழைக்கும் பொய்கள் மூலம் மறைக்க முடியும் என்று காங்கிரஸும் அதன் அழுகிப்போன சுற்றுச்சூழலும் நம்புமானால், அவர்கள் தவறிழைக்கிறார்கள் என்று அர்த்தம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பி.ஆர். அம்பேத்கர் குறித்து மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய கருத்துக்கள் குறித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவதற்கு பிரதமர் மோடி இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், "தாங்கள் இத்தனை ஆண்டுகளாக செய்த தவறுகளை குறிப்பாக டாக்டர் அம்பேத்கரை அவமதித்த செயல்களை தீங்கிழைக்கும் பொய்கள் மூலம் மறைக்க முடியும் என்று காங்கிரஸும் அதன் அழுகிப்போன சுற்றுச்சூழலும் நம்புமானால், அவர்கள் தவறிழைக்கிறார்கள்.

டாக்டர் அம்பேத்கரின் பாரம்பரியத்தை அழிக்கவும், பட்டியல் மற்றும் பழங்குடி சமூகத்தினை அவமதிக்கவும் பரம்பரியமாக ஒரு குடும்பத்தால் வழிநடத்தப்படும் கட்சியொன்று ஆண்டாண்டு காலமாக எப்படி நடந்து கொண்டது என்பதை இந்திய மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அம்பேத்கரை ஒரு முறை அல்ல இரண்டு முறை தேர்தலில் தோற்கடித்தது, அவருக்கு எதிராக பண்டித நேரு பிரச்சாரம் செய்தது, அவரின் இழப்பை தன்மான பிரச்சனையாக்கியது, அவருக்கு பாரத ரத்னா தர மறுத்தது, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அவரது உருவப்படத்துக்கு பெருமைக்குரிய இடத்தை வழங்க மறுத்தது போன்றவை காங்கிரஸ் கட்சி அம்பேத்கருக்கு எதிராக செய்திருக்கும் பாவங்களின் பட்டியல்.

காங்கிரஸ் கட்சி அவர்கள் விரும்பியபடி செயல்படலாம், ஆனால் அவர்களின் ஆட்சி காலத்தில் பட்டியல் மற்றும் பழங்குடியின சமூகத்துக்கு எதிராக நடந்த படுகொலைகளை அவர்களால் மறைக்க முடியாது. நீண்ட காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, பட்டியல் மற்றும் பழங்குடி சமூகங்கள் அதிகாரம் பெறுவதற்கு எதையும் செய்யவில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமித் ஷா பேசியது என்ன?: அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டைக் குறிக்கும் விவாதத்தின் போது மாநிலங்களவையில் நேற்று உரையாற்றிய அமித் ஷா, "பி.ஆர். அம்பேத்கரின் பெயரை பயன்படுத்துவது இப்போது ஒரு "பேஷன்" ஆகிவிட்டது. எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று பேசுகிறார்கள். கடவுளின் பெயரை இவ்வாறு பலமுறை சொன்னாலாவது அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்.

அம்பேத்கரின் பெயரை 100 மடங்கு அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், அவரைப் பற்றிய உங்கள் உணர்வு என்ன என்பதை நான் கூற விரும்புகிறேன். ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசாங்கத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து முதல் அமைச்சரவையில் இருந்து பி.ஆர்.அம்பேத்கர் ராஜினாமா செய்ய நேரிட்டது. பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினரை நடத்துவதில் திருப்தி இல்லை என்று அம்பேத்கர் பலமுறை கூறியுள்ளார். அவருக்கு ஒரு உத்தரவாதம் வழங்கப்பட்டது. அந்த உத்தரவாதம் நிறைவேறாததால், அவர் ராஜினாமா செய்தார்" என்று கூறி இருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

31 mins ago

இந்தியா

6 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்