பெங்களூரு: தமிழ்ப் புத்தகத் திருவிழா தலைவர் வணங்காமுடி நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பாக கடந்த 2 ஆண்டுகளாக பெங்களூருவில் தமிழ்ப் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டது. இதற்கு தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதைத் தொடர்ந்து இந்த ஆண்டும், புத்தகத் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. டிசம்பர் 20-ம் தேதி காலை 10 மணிக்கு சிவாஜி நகர் அருகிலுள்ள இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் வளாகத்தில் இந்த புத்தகத் திருவிழாவை இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன் தொடக்கி வைக்கிறார். வரும் 29-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறவுள்ள இவ்விழாவில் தினமும் மாலை புத்தக வெளியீடு, கருத்தரங்கம், பட்டிமன்றம், இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் கன்னட எழுத்தாளர் எஸ்.ஜி.சித்தராமையா, பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் கோபிநாத், முன்னாள் திமுக எம்எல்ஏ கொ.வீ.நன்னன், எழுத்தாளர் என்.சொக்கன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 30-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் பங்கேற்கும் இக்கண்காட்சியில் பெங்களூருவை சேர்ந்த தமிழ்ப் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களும் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago