சம்பலில் 46 வருடங்களுக்கு முன்பு நடந்த மதக்கலவரம் தொடர்பாக விசாரணை: உ.பி. பேரவையில் யோகியின் உரைக்கு பின் நடவடிக்கை

By ஆர்.ஷபிமுன்னா

உத்தர பிரதேச மாநிலம், சம்பல் நகரில் உள்ள ஜாமா மசூதி, கோயிலை இடித்து கட்டியதாக சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி அம்மசூதியில் களஆய்வு நடத்தப்பட்டபோது ஏற்பட்ட கலவரத்தில் 5 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இந்த மசூதியை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் திருடப்படுவதாகவும், அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான சோதனையின்போது, தீபா சராய் பகுதியில் 46 வருடங்களாக மூடப்பட்டிருந்த ஒரு சிவன் கோயில் திறக்கப்பட்டது.

இந்நிலையில், உ.பி. சட்டப்பேரவையில் முதல்வர் யோகி நிகழ்த்திய உரையில், ‘‘1947-ல் நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து இதுவரை சம்பலின் மதக்கலவரத்துக்கு 209 இந்துக்கள் உயிரிழந்துள்ளனர். 1978 மார்ச் 29-ல் நடந்த மதக்கலவரம் மிகவும் கொடுமையானது. இச்சம்பவத்தால் 40 ரஸ்தோகி சமூக குடும்பங்கள் இடம்பெயர வேண்டியதாயிற்று. இதனால், அப்பகுதியிலிருந்த கோயிலுக்கு யாரும் செல்வதில்லை. கலவரத்தை நேரில் கண்ட சாட்சிகள் இன்றும் சம்பலில் உள்ளனர். கலவரம் முடிந்து 46 வருடங்கள் முடிந்தும் அதற்கு காரணமானவர்கள் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை" என்றார்.

இதையடுத்து, சம்பல் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மதக்கலவரம் தொடர்பான விசாரணையில் இறங்கி விட்டனர். அப்போது பதிவான 169 வழக்குகளும் முடித்து வைக்கப்பட்ட நிலையில், அதன் பழைய கோப்புகள் தூசி தட்டப்பட்டு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படுகின்றன. இக்கலவரத்தின் சாட்சிகள் நீதிமன்றத்தில் ஆஜரானார்களா? இவர்களது தற்போதைய நிலைமை என்ன? உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் திரட்டுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். சம்பல் மசூதியின் இமாம் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்த கலவரம் உருவானதாக வழக்குகள் பதிவாகி உள்ளன. காக்கு சராய் கோயிலுக்கு அருகிலுள்ள பழமையானக் கிணற்றில் சிவன், பார்வதி மற்றும் விநாயகரின் சிலைகள் சேதமடைந்த நிலையில் கிடந்துள்ளன.

காக்கு சராயில் மேலும் 4 பழமையான கிணறுகளின் மேல்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு அதன் மீது வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதையும் சம்பல் மாவட்ட நிர்வாகம் மீட்டு அக்கிணறுகளை பழைய நிலைக்கு மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது.

முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஹயாத்நகர் பகுதியிலும் ஒரு கோயில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இங்கு கடந்த 1982-ல் நடந்த மதக்கலவரத்துக்கு பின் பூசைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்புகள் இன்றி வாசல் திறந்துகிடந்த கோயிலின் உள்ளே ராதா கிருஷ்ணா மற்றும் அனுமன் சிலைகள் இருந்துள்ளன. இதுவும் சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் வழிபாடுகளுக்கு தயார் செய்யப்படுகிறது.

இந்நிலையில், உ.பி. முழுவதிலும் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் மூடப்பட்டு கிடக்கும் கோயில்களை மீண்டும் திறக்க கோரிக்கைகள் கிளம்பத் துவங்கி விட்டன. வாரணாசியில் முஸ்லிம்கள் வாழும் மதன்புரா தெருவில் ஒரு கோயில், 1982-ல் நிகழ்ந்த மதக்கலவரத்துக்குப் பின் மூடப்பட்டுள்ளது. சுமார் 250 வருடங்கள் பழமையான அந்தக் கோயிலை மீண்டும் திறப்பதற்காக சனாதன் ரக்ஷா தளம் என்ற இந்துத்துவா அமைப்பினர் நேரில் சென்றுள்ளனர். அங்கு தசாஅசுவமேதக் கரை காவல் நிலையப் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று அந்தக் கோயில் பற்றி விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்