திருச்சூர் பூரம் திருவிழாவில் யானை அணிவகுப்பு கட்டுப்பாடுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

By செய்திப்பிரிவு

திருச்சூர் பூரம் திருவிழாவில் யானை அணிவகுப்புக்கு கட்டுப்பாடு விதித்துள்ளதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெறும் பூரம் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தத் திருவிழாவின்போது ஏராளமான யானைகள் பங்கேற்கும் அணிவகுப்பு நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர். இந்நிலையில் இந்த யானைகள் அணிவகுப்புக்கு கட்டுப்பாடு விதித்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் யானைகள் அணிவகுப்பு எவ்வாறு நடைபெறவேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களையும் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

2 யானைகளுக்கு இடையே 3 மீட்டர் இடைவெளி இருக்கவேண்டும், தீப்பந்தத்துக்கும் யானைக்கும் இடையே 5 மீட்டர் இடைவெளி இருக்கவேண்டும், பொதுமக்களுக்கும் யானைக்கும் இடையே 8 மீட்டர் இடைவெளி இருக்கவேண்டும் என்ற வழிகாட்டுதல்களை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

இந்நிலையில் இதை எதிர்த்து திருச்சூர் பூரம் திருவிழாவை நடத்தும் திருவம்பாடி தேவஸ்வம், பரமேக்காவு தேவஸ்வம் போர்டு நிர்வாகக் குழு ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று தேவஸ்வம் போர்டுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

27 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்