பழம்பெரும் காளிகாம்பாள் கோயில் அமைந்த கால்காஜி தொகுதியில் முதல்வர் அதிஷி மீண்டும் வெல்வாரா?

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: டெல்​லி​யின் ஆம் ஆத்மி முதல்​வரான அதிஷி மர்லேனா தனது கால்​காஜி தொகு​தி​யில் மீண்​டும் களம் இறங்​கு​கிறார். இங்கு பழம்​பெரும் காளி​காம்​பாள் கோயில் அமைந்​துள்ளது.

டெல்​லி​யில் கடந்த 2020 சட்டப்​ பேரவை தேர்​தலில் ஆம் ஆத்மி மூத்த தலைவர் அதிஷி, கால்​காஜி தொகு​தி​யில் முதல் முறை யாக போட்​டி​யிட்டு பாஜக வேட்​பாளர் தரம்​பீர் சிங்கை தோல்​வி​யுறச் செய்​தார். அப்போது அவர் 11,422 வாக்​குகள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றார். இந்நிலையில், கால்​காஜி தொகு​தி​யில் அதிஷி மீண்​டும் வெற்றி பெறு​வாரா என்ற கேள்வி எழுந்​துள்ளது.

ஏனெனில், கடந்த 2019-ல் கிழக்கு டெல்லி மக்களவை தொகு​தி​யின் ஆம் ஆத்மி கட்சி பொறுப்​பாளராக அதிஷி நியமிக்​கப்​பட்​டார். அதே ஆண்டு நடந்த மக்களவை தேர்​தலிலும் போட்​டி​யிட்​டார். ஆனால், பாஜக வேட்​பாளர் கவுதம் கம்பீரிடம் 4.77 லட்சம் வாக்​குகள் வித்​தி​யாசத்​தில் தோல்​வியடைந்​தார். அவருக்கு 3-ம் இடமே கிடைத்​தது.

இதையடுத்து 2-வது முறை சட்டப்​பேர​வைத் தேர்​தலில் போட்​டி​யிட்டு கால்​காஜி தொகுதி எம்எல்ஏ ஆனார். மதுபான ஊழல் வழக்​கில் கேஜ்ரிவால் சிறை சென்​ற​தால், அவருக்கு பதில், கடந்த செப்​டம்பர் மாதம் 14-ம் தேதி அதிஷி முதல்​வ​ரானார். முதல்வர் அதிஷி தனது தொகு​தி​யிலுள்ள பழம்​பெரும் கால்​காஜி காளி​காம்​பாள் கோயிலுக்கு செல்வம் வழக்​கம். இந்த தொகுதி மக்கள் கால்​காஜி கோயிலை அதிகம் மதிக்​கின்​றனர். இக்கோயி​லில் கால்​காஜி மாதா எழுந்​தருளியதாக நம்பிக்கை உள்ளது. இந்த கோயில் கடந்த 1764-ல் மராத்தா மன்னர்​களால் கட்டப்​பட்​டது. பிறகு 1816-ல் முகலாய மன்னர் அக்பரது ஆட்சி​யில் கால்​காஜி கோயிலை சுற்றி தங்கும் மடங்கள் கட்டப்​பட்டன. பஹாய் சமூகத்​தினரின் பிரபல சுற்றுலா தலமான லோட்டஸ் கோயிலும் கால்​காஜி​யில் அமைந்​துள்ளது.

இத்துடன், டெல்​லி​யின் முதல்​வரான மறுநாள், கன்னாட்பிளேஸில் உள்ள பிரபல ஹனுமன் கோயிலுக்​கும் அதிஷி சென்​றிருந்​தார். இதுபோல், தம்மை ஒரு பக்தையாக ​முன்னிறுத்​திக் ​கொள்​ளும் அ​திஷி, ​கால்​காஜி தொகு​தி​யில் மீண்​டும் வெற்றி பெறு​வார் என்றே எ​திர்​பார்​க்​கப்​படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்