நாக்பூர்: மகாராஷ்டிர அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. நாக்பூரில் நடைபெற்ற விழாவில் ஆளும் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸை சேர்ந்த 39 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணிக்கு 230 இடங்கள் கிடைத்தன. பாஜக மட்டும் 132 இடங்களில் வெற்றி பெற்றது.
மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கடந்த 5-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர். இந்நிலையில், மகாராஷ்டிர அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. நாக்பூரில் நடைபெற்ற விழாவில், பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸை சேர்ந்த 39 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். விழாவில் முதல்வர் பட்னாவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாஜக மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே, மூத்த தலைவர்கள் ராதாகிருஷ்ண விகே பாட்டீல், சந்திரகாந்த் பாட்டீல் உட்பட பாஜகவை சேர்ந்த 19 பேர் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சி மூத்த தலைவர்கள் குலாப்ராவ் பாட்டீல், தாதா பூஸ் உட்பட 11 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஹசன் முஷ்ரிப், தனஞ்செய் முண்டே உட்பட 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.
மகாராஷ்டிர எம்எல்ஏக்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்க முடியும். கடந்த 5-ம் தேதி முதல்வராக தேவேந்திர பட்னாவிஸும், துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் பதவியேற்றுக் கொண்டனர். தற்போது 39 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக மகாராஷ்டிர அமைச்சரவையில் 42 பேர் இடம்பெற்றுள்ளனர்.
புதிய அமைச்சர்களில் 33 பேருக்கு கேபினட் அந்தஸ்தும், 6 பேருக்கு இணை அமைச்சர் அந்தஸ்தும் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் ஒரு முஸ்லிம், 4 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.
துணை முதல்வர்கள், புதிய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் பின்னர் அறிவிக்கப்படும். மாநில உள்துறை, முதல்வர் பட்னாவிஸிடம் இருக்கும். இந்த துறை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படாது. ஷிண்டேவின் சிவசேனா அணிக்கு ஊரக வளர்ச்சி, வீட்டு வசதி, தொழில், சுகாதாரம், போக்குவரத்து, தொழில்நுட்பம், சுற்றுலா, மராத்தி மொழி வளர்ச்சி ஆகிய துறைகள் ஒதுக்கப்படும். அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸுக்கு நிதி, கூட்டுறவு, விளையாட்டு உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்படும் என்று மகாராஷ்டிர பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன
பாஜக மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே கேபினட் அமைச்சராக பதவியேற்றுள்ளதால், புதிய பாஜக தலைவராக ரவீந்திர சவாண் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago