நிறுவனங்களோ, தனிநபரோ ஆய்வுக்கு உட்படுத்தப்படாவிட்டால் சீரழிவு நிச்சயம்: ஜக்தீப் தன்கர்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நிறுவனங்களோ அல்லது தனி நபரோ ஆய்வுக்கு உட்படுத்தப்படாவிட்டால் சீரழிவு ஏற்படுவதை தடுக்க முடியாது என்று குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் உள்ள ஐசிடபிள்யுஏ-வில் இந்திய அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு கணக்குகள் மற்றும் நிதி சேவைகளின் 50வது நிறுவன தின நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பேசிய ஜக்தீப் தன்கர், “இன்று நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு, உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் அடிக்கடி அர்த்தமுள்ள உரையாடல்கள் மற்றும் உரைகள் நிகழ்வது குறைந்துபோனதே காரணம். உரைகள் மற்றும் அர்த்தமுள்ள உரையாடல்கள் இரண்டும் ஜனநாயகத்தின் விலைமதிப்பற்ற நகைகள். உரைகளும், தொடர்பும் ஒருவருக்கொருவரை இணைக்கின்றன. நல்லிணக்கமே வெற்றிக்கு முக்கியம்.

எந்தவொரு ஜனநாயகத்திலும் உயர் மதிப்பீடுகள் முக்கியமானவை. அது உரைகள் மற்றும் உரையாடலின் நுட்பமான சமநிலையை மையமாகக் கொண்டிருக்க வேண்டும். இந்த இரட்டை சக்திகள், ஜனநாயக உயிர்ச்சக்தியை வடிவமைக்கின்றன. இதன் முன்னேற்றம் தனிப்பட்ட நிலைகளால் அளவிடப்படுவதில்லை, மாறாக பரந்த சமூக நலன்களால் அளவிடப்படுகிறது. இந்தியாவின் ஜனநாயகப் பயணம், பன்முகத்தன்மை, பரந்த மக்கள்தொகைத் திறன் ஆகியவை தேசிய முன்னேற்றத்தைத் தூண்டுகின்றன. நாம் முன்னோக்கி செல்லும் பாதையை பட்டியலிடுகையில், ஜனநாயக ஆரோக்கியமும் பொருளாதார உற்பத்தியும் தேசிய வளர்ச்சியில் பிரிக்க முடியாத பங்காளிகள் என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும்.

நம்மில் உள்ள நான் என்னும் தன்முனைப்பு அடக்க முடியாதது. அதனைக் கட்டுப்படுத்த நாம் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். தன்முனைப்பு யாருக்கும் பயனளிக்காது. அதேநேரத்தில், அதை வைத்திருக்கும் நபரை அது சேதப்படுத்துகிறது. சுய பரிசோதனை மிகவும் முக்கியமானது. ஒரு தனிநபரையோ அல்லது ஒரு நிறுவனத்தையோ நல்ல நிலைக்கு கொண்டுவருவதற்கான உறுதியான வழி அது. நவீன அரசு ஊழியர்கள், தொழில்நுட்ப அறிவாளிகளாகவும், மாற்றத்தை எளிதாக்குபவர்களாகவும், பாரம்பரிய நிர்வாக எல்லைகளைத் தாண்டியவர்களாகவும் இருக்க வேண்டும். சேவையே நமது அடிக்கல்லாக உள்ளது. நிர்வாகிகள், நிதி ஆலோசகர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் தணிக்கையாளர்கள் போன்ற உங்கள் பாத்திரங்கள் நாளைய சவால்களைச் சந்திக்கும் வகையில் உருவாக வேண்டும். இந்த பரிணாமம், சேவை வழங்கலை பாரம்பரிய முறைகளிலிருந்து அதிநவீன தீர்வுகளுக்கு மாற்ற வேண்டும்.

நாம் இன்னொரு தொழிற்புரட்சியின் உச்சத்தில் இருக்கிறோம். டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் நம்மை ஆக்கிரமித்துள்ளன. நம் வீட்டில், அலுவலகத்தில், எல்லா இடங்களிலும் அது நம்முடன் இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு, இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், மெஷின் லேர்னிங், பிளாக்செயின் போன்றவை அவை. சவாலை நாம் சமாளிக்க வேண்டும், சவாலை வாய்ப்புகளாக மாற்ற வேண்டும்.

இந்த நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் அவரவர் லட்சியங்களுடன் தடையின்றி இணைக்க வேண்டும். நமது சேவைகள் இன்னும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்க வேண்டும். அடிப்படை ஒருமைப்பாட்டைப் பேணுவதன் மூலம் அவர்கள் விரைவான தொழில்நுட்ப சவால்கள், சமூக சவால்களுக்கு மாற்றியமைக்க வேண்டும். தேசத்தைக் கட்டியெழுப்பும் நமது சிறப்புரிமை இப்போது அதிகப் பொறுப்பைக் கொண்டுள்ளது. நாம், வளர்ந்த தேசத்தின் பார்வையை 2047 இல் உணர வேண்டும்.

குடும்பத்தில் அல்லது அமைப்பில் எப்போதும் பிரச்சினைகள் இருக்கும். சிக்கல்கள் இயற்கையானவை. தோல்வியைப் போல முன்னோக்கிச் செல்ல சிக்கல்கள் நமக்கு உதவுகின்றன. தோல்வி என்பது பின்னடைவு அல்ல, அடுத்த முறை வெற்றியை அடைய அது உங்களைத் தூண்டுகிறது’." என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில், தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, டிஜிட்டல் தொலைத்தொடர்பு ஆணையத்தின் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்