நிலச்சரிவு பாதிப்பு: வயநாட்டுக்கு சிறப்பு நிதியுதவி கோரி பிரியங்கா காந்தி போராட்டம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு நிவாரண நிதி உதவியை விரைவாக வழங்கக் கோரி பிரியங்கா காந்தி வத்ரா உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவின் வயநாடு மாவட்டத்துக்கு விரைவாக நிதி உதவி வழங்க வலியுறுத்தி வயநாடு தொகுதியின் எம்பியும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி வத்ரா தலைமையில் கேரள எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற நுழைவு வாயில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், “வயநாட்டுக்கு நீதி வேண்டும்” என்றும், "வயநாட்டுக்கு நிவாரண நிதி வழங்குங்கள்" என்றும் கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி வத்ரா, “வயநாடுக்கு சிறப்பு நிதி உதவியை வழங்க அரசு மறுப்பதால் நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம். உள்துறை அமைச்சரிடம் முறையிட்டோம். பிரதமருக்கும், சாத்தியமான அனைவருக்கும் கடிதம் எழுதியுள்ளோம். இது ஒரு கடுமையான இயற்கை பேரிடர் என்று அறிவிக்கவும், சிறப்பு தொகுப்பு வழங்கவும் நாங்கள் கோரியுள்ளோம். காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் இமாச்சலப் பிரதேசத்திலும் இதேபோன்ற பெரிய அளவிலான அழிவுகள் நடந்துள்ளன. அங்கும் அவர்கள், மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என்று நீண்ட காலமாக கோரி வருகின்றனர்.

வயநாட்டில் மக்களின் உயிரிழப்பு, வலி ​​மற்றும் துன்பத்தை பார்த்தபோதிலும் அரசியல் காரணமாக மத்திய அரசு, பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க வேண்டியதை வழங்க மறுக்கிறது. அவர்கள் இந்தியாவின் குடிமக்கள். இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட அவர்களிடம் எந்த வகையிலும் பாகுபாடு காட்டக்கூடாது. மத்திய அரசும் பிரதமரும், ஒவ்வொரு இந்திய குடிமகனின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தின் பாதுகாவலர்களாக இருக்க வேண்டிய நேரம் இது. அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு தேவையான உதவிகளை செய்ய வேண்டிய நேரம் இது.

வயநாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டியதை மனிதாபிமானம் மற்றும் கருணையுடன் அருசு வழங்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். நாங்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளோம்.” என தெரிவித்தார். கனமழையைத் தொடர்ந்து கடந்த ஜூலை 30 அன்று நேர்ந்த நிலச்சரிவு காரணமாக வயநாட்டில் உள்ள பூஞ்சிரிமட்டம், சூரல்மாலா, முண்டக்கை ஆகிய மூன்று கிராமங்களின் பெரும் பகுதியும், அட்டமலா பகுதியும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த துயர நிகழ்வில் 231 பேர் உயிரிழந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்