‘டெல்லி சலோ’ யாத்திரையை மீண்டும் தொடங்கும் விவசாயிகள்; ஹரியானாவில் இணைய சேவை துண்டிப்பு

By செய்திப்பிரிவு

சண்டீகர்: விவசாய பயிர்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தங்களின் டெல்லி நோக்கி 101 பேர் செல்லும் ஜோடி யாத்திரையை இன்று மதியம் மீண்டும் தொடங்குகின்றனர். இதனை முன்னிட்டு ஹரியானா அரசு அம்மாநிலத்தின் அம்பலா மாவட்டத்தின் 12 கிராமங்களில் டிசம்பர் 17-ம் தேதி வரை இணைய சேவை, மொத்தமாக குறுஞ்செய்தி அனுப்பும் சேவையை தடைசெய்துள்ளது.

கிஷான் மஸ்தூர் மோர்சா (கேஎம்எம்) தலைவர் சர்வான் சிங் பந்தேர், சனிக்கிழமை விவசாயிகள் குழு டெல்லி நோக்கிச் செல்லும் என்று தெரிவித்திருந்தார். டிசம்பர் 6-ம் தேதியில் இருந்து தலைநகர் டெல்லி நோக்கி பேரணி செல்வதற்கு விவசாயிகள் மேற்கொள்ளும் மூன்றாவது முயற்சி இதுவாகும். முன்னதாக டிசம்பர் 6 மற்றும் 8-ம் தேதி என இரண்டு முறை விவசாயிகள் டெல்லி செல்ல முயன்றனர். என்றாலும் அவர்கள் ஹரியானா போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு பேரணி செல்ல அனுமதிக்கப்படவில்லை.

டெல்லி நோக்கி செல்லும் விவசாயிகளை தடுத்து நிறுத்துவதற்காக ஹரியானா எல்லையில் அம்மாநில போலீஸார் பல அடுக்கு தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். இதனிடையே, ஹரியானா மாநில கூடுதல் தலைமைச் செயலாளார் (உள்துறை), பொது அமைதியைக் காக்கும் படிக்கு, இணைய சேவை மற்றும் மொத்தமாக குறுஞ்செய்தி அனுப்பும் சேவைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அம்பலா மாவட்டத்தில் ஏற்கெனவே பாரதீய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா பிரிவு 163 -ன் படி தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து பேர் அல்லடு அதற்கு மேல் குழுவாக கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

டெல்லி நிர்வாகத்திடம் அனுமதி பெற்ற பின்பு விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக செல்லாம் என்று ஹரியானா போலீஸார் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.

சம்யுக்தா கிஷான் மோர்சா (அரசியலற்றது) மற்றும் கேஎம்எம் போன்ற விவசாய அமைப்புகளின் தலைமையின் கீழ், பயிர்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகின்றன. மேலும் மத்திய அரசு இதுதொடர்பாக மத்திய அரசு தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

இதனிடையே கனவுரி எல்லைக்கு அருகே சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வரும் விவசாயத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லாவாலின் உண்ணாவிரதம் இன்று 19வது நாளை எட்டியுள்ளது. நீண்ட நாட்களாக உண்ணாவிரதம் இருந்துவருவதால் அவரின் உடல் பலவீனமடைந்துள்ளதால் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட வேண்டம் என மருத்துவர்கள் ஏற்கெனவே தெரிவித்துள்ளனர்.

என்றாலும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் தல்லாவாலினைச் சுற்றி பாதுகாப்பு வளையம் போல் அமைத்துள்ளதால், மாநில அதிகாரிகளால் அவரை நெருங்கி அங்கிருந்து வெளியேற்ற முடியவில்லை. முன்னதாக அவர் உண்ணாவிரதம் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், நவம்பர் 26-ம் தேதி அவரை போலீஸார் போராட்டம் நடக்கும் இடத்தில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.

தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி பேரணி சென்ற விவசாயிகள் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில எல்லைகளான ஷம்பு மற்றும் கனவுரி ஆகிய இடங்களில் தடுத்து நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிப்ரவரி 13-ம் தேதி முதல் விவசாயிகள் அங்கு முகாமிட்டு போராடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்