புதுடெல்லி: மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கருக்கு எதிராக, எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி சார்பில் கடந்த 10-ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டது.
மாநிலங்களவை செகரட்டரி ஜெனரலிடம் அந்தத் தீர்மானம் வழங்கப்பட்டது. இதற்கு ஆளும் பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மாநிலங்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியதும், அவைத் தலைவர் தன்கர் பேசியதாவது: நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு உரிமை உள்ளது. அதேநேரத்தில் விதிமுறைகளை மீறுகின்றனர். எழுத்துப்பூர்வமாக நோட்டீஸ் அளித்த 14 நாட்களுக்குப் பிறகுதான் அதன் மீது விவாதம் நடத்த முடியும். ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விதிகளை மீறுகின்றனர். நான் விவசாயியின் மகன். எந்த பலவீனத்தையும் வெளியில் காட்டிக் கொள்ள மாட்டேன்.
என் தாய்நாட்டுக்காக என் வாழ்க்கையை தியாகம் செய்வேன். நான் எவ்வளவோ பொறுமை யாக இருந்துவிட்டேன். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால், அரசியலமைப்பு சட்டத்தை நீங்கள் அவமானப்படுத்துகிறீர்கள். இவ்வாறு தன்கர் பேசினார். அதற்கு காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது, ‘‘நீங்கள் விவசாயியின் மகனாக இருந்தால், நான் கூட தொழிலாளியின் மகன்தான். ஆளும் கட்சி உறுப்பினர்களை பேச அனுமதிக்கிறீர்கள். அவர்கள் தொடர்ந்து எங்கள் கட்சியை அவமானப்படுத்தி பேசுகின்றனர். அதை நீங்கள் ஊக்கப்படுத்துகிறீர்கள்’’ என்றார். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து அவை தொடங்கிய ஒரு மணி நேரத்துக்குள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago