‘ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறை நல்ல நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டால், அது பலன் அளிக்கக்கூடியதுதான்’’ என ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
மத்தியில் பாஜக ஆட்சியை எதிர்க்கும் மாநில அரசுகளை குறிவைத்துதான் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறை கொண்டு வரப்படுவதாக ஒரு கருத்து சில அரசியல் கட்சிகளிடம் நிலவுகிறது. இதற்கான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதனால் நாடாளுமன்றத்தில் இந்த மசோதா விரைவில் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. இந்நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறை குறித்து பிரசாந்த் கிஷோர் பாட்னாவில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
நான் பல தேர்தல்களில் ஈடுபட்டுள்ளேன். ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் எங்காவது ஒரு இடத்தில் தேர்தல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த 1960-ம் ஆண்டு வரை மக்களவைக்கும், மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடத்தப்பட்டது. அந்த நடைமுறை மீண்டும் வந்தால், அது நாட்டுக்கு நல்லதுதான். ஆனால் இந்த மாற்றம் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். திடீரென இந்த மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்க கூடாது.
புதிய மசோதாக்களின் வெற்றி மத்திய அரசின் நோக்கத்தை பொறுத்தது. தீவிரவாத ஒழிப்பு என்ற பெயரில் சட்டம் கொண்டு வரலாம். ஆனால், அது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை தொந்தரவு செய்யத்தான் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார்.
» இதயத்தில் அரசியல் சாசனம் சுமக்கிறோம்: காங்கிரஸ் கட்சிக்கு ராஜ்நாத் சிங் பதில்
» அமெரிக்கா, பிரிட்டன், கனடா உட்பட வெளிநாடுகளில் 86 இந்தியர் மீது தாக்குதல்
முக்கிய செய்திகள்
இந்தியா
15 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago