யுஏஇ துணை பிரதமர் ஷேக் அப்துல்லாவுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

By செய்திப்பிரிவு

இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் குறித்து ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) துணை பிரதமர் ஷேக் அப்துல்லா உடன் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார்.

கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பரில் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற்றது. அப்போது இந்தியா- மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (ஐஎம்இசி) திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பிய ஒன்றியம், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் கையெழுத்திட்டன.

ஐஎம்இசி வழித்தடம் 6,000 கி.மீ. நீளம் கொண்டதாகும். இதில் 3,500 கி.மீ. தொலைவு கடல் வழி பாதை ஆகும்.

புதிய பொருளாதார வழித்தடத்தில் மகாராஷ்டிர தலைநகர் மும்பை, ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜபல் அலி, அல் குவைபத், சவுதி அரேபியாவின் ஹரத், ரியாத், அல் ஹதிதா, இஸ்ரேலின் ஹைபா வழியாக கிரீஸ் நாட்டின் பிரேயஸ் நகர் வரை கடல், சாலை, ரயில் மார்க்கமாக இணைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த பொருளாதார வழித்தடத்தின் இருபுறமும் மின்சாரம், தொலைத்தொடர்பு கேபிள்கள் பதிக்கப்பட உள்ளன. அதோடு ஹைட்ரஜனை கொண்டு செல்ல ராட்சத குழாய்களும் பதிதிக்கப்பட உள்ளன.

தற்போது இந்தியாவில் இருந்து புறப்படும் சரக்கு சரக்கு கப்பல் ஜெர்மனியை சென்றடைய சுமார் 36 நாட்கள் ஆகிறது. புதிய வழித்தடத்தில் 14 நாட்களில் இந்திய சரக்குகள், ஜெர்மனியை சென்றடையும். இதன்மூலம் நேரமும் செலவும் சேமிக்கப்படும்.

ஐஎம்இசி வழித்தடத்தை செயல்படுத்த ஐக்கிய அரபு அமீரகம் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. அந்த நாட்டு அதிபர் ஷேக் முகமது கடந்த செப்டம்பரில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து ஐஎம்இசி வழித்தடத்தை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை பிரதமர் ஷேக் அப்துல்லா அரசு முறை பயணமாக இந்தியா வந்தார். அவர் நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்துப் பேசினார். அப்போது ஐஎம்இசி பொருளாதார வழித்தடத்தை செயல்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்தினர்.

ஐக்கிய அரபு அமீரக துணை பிரதமர் ஷேக் அப்துல்லா கூறும்போது, “சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் இடையே நல்லுறவு நீடிக்கிறது. இரு நாடுகள் இடையிலான பொருளாதார உறவு புதிய உச்சத்தை தொடும்" என்று தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி கூறும்போது, “மேற்கு ஆசியாவில் அமைதி, ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த இரு நாடுகளும் இணைந்து பணியாற்றி வருகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏராளமான இந்தியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களின் நலனில் அந்த நாட்டு அரசு மிகுந்த அக்கறை செலுத்துகிறது. அதற்காக நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இரு நாடுகள் இடையிலான பொருளாதார உறவு மேலும் வலுவடையும்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்