நடிகர் அல்லு அர்ஜுன் மீதான நடவடிக்கையும், அரசியல் எதிர்வினைகளும்! - ஒரு விரைவுப் பார்வை

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்புக் காட்சி கூட்ட நெரிசலில் சிக்கிய பெண் உயிரிழந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், "சட்டம் அதன் கடமையைச் செய்யும்” என்று தெலங்கானா முதல்வர் ரேவ்ந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “சட்டம் அதன் கடமையைச் செய்யும். இந்த வழக்கு விசாரணையில் யாருடைய தலையீடும் இருக்காது" என்று தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் கண்டனம்: நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டது, அவர் நடத்தப்பட்ட விதம் குறித்து எதிர்க்கட்சிகளான பாஜக மற்றும் பிஆர்எஸ் கட்சிகள் ஆளும் காங்கிரஸ் அரசை கடுமையாக சாடியுள்ளன. பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான பண்டி சஞ்சய் குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில், "தேசிய விருது பெற்ற அல்லு அர்ஜுன், தன்னைத் தயார்படுத்திக்கொள்ள கூட அவகாசம் அளிக்காமல் நேரடியாக அவரது படுக்கை அறையில் இருந்த கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். இது அவமதிக்கும செயல். இது, தவறான நிர்வாகத்தையே காட்டுகிறது.

உலக அளவில் இந்திய சினிமாவுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்த நட்சத்திரம் கண்னியமாக நடத்தப்படுவதற்கு தகுதி உடையவர். சத்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்த துயரச் சம்பவம் துரதிருஷ்டவசமானது. ஆனால், அது இவ்வாறான கூட்டங்களை கையா ளமுடியாத காங்கிரஸ் அரசின் தோல்வியாகும். இதுபோன்ற அலட்சியமும், தவறாக நடத்தப்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. நடிகர் அல்லு அர்ஜுனும், அவரது ரசிகர்களும் கண்ணியமாக நடத்தப்படுவதற்கு தகுதியுடையவர்களே" என்று தெரிவித்துள்ளார்.

பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமா ராவ் தனது எக்ஸ் பக்கத்தில், "திரையரங்க கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நான் அனுதாபப்படுகிறேன். ஒரு சாதாரண குற்றவாளியைப் போல அல்லு அர்ஜுன் நடத்தப்பட்ட விதம் தேவையற்றது. அதிலும் அவர் நேரடியாக சாராத ஒரு குற்றத்துக்காக. அரசின் அவடாவடியான நடத்தையைக் கண்டிக்கும் அதேவேளையில் மரியாதையாகவும், கண்ணியமாகவும் நடத்தப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார். இதனிடையே, “அல்லு அர்ஜுனின் கைது அவசியமற்றது. நான் எப்போது அவருக்கு ஆதரவாக இருப்பேன்” என்று மூத்த நடிகர் என்.பாலகிருஷ்ணா தெரிவித்திருந்துள்ளார்.

நடந்தது என்ன? - சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் கடந்த டிசம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அதற்கு முந்தைய நாள் இரவு ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் நடந்த சிறப்புக் காட்சியைப் பார்க்கச் சென்ற ரேவதி (39) என்ற ரசிகை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவருடைய மகன் தேஜ் படுகாயம் அடைந்தார். நடிகர் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்ததால்தான் நெரிசல் ஏற்பட்டது என்பதால், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. உயிரிழந்த ரேவதி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்குவதாக அல்லு அர்ஜுன் அறிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன், அவரது பாதுகாவலர்கள் குழு, சத்தியா திரையரங்க நிர்வாகத்தினர் மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகள் 105, மற்றும் பிரிவு 118 (1)-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. திரையரங்க ஊழியர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பே கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இன்று (டிச.13) அல்லு அர்ஜுனை காவல் துறையினர் அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். இதையடுத்து விசாரணைக்காக அவர் சிக்கடப்பள்ளி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து, காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்குப் பின் நாம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே, இந்த வழக்கில் ஜாமீன் கோரி அல்லு அர்ஜுன் வழக்கறிஞர் தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை மாலையில் நடைபெற்றது. அப்போது அரசு தரப்பில், “சிறப்பு திரையிடலுக்குச் சென்றால், இப்படியான ஒரு துரதிஷ்வசமான நிகழ்வு நடைபெறும் என தெரிந்தே அல்லு அர்ஜுன் அங்கு சென்றுள்ளார்” என தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி ஜுவ்வாடி ஸ்ரீதேவி, “நடந்த சம்பவத்துக்கு அவர் மட்டும் எப்படி பொறுப்பாக முடியும்? இத்தனைக்கும் அவர் அனுமதி பெற்று தான் அங்கு சென்றிருக்கிறார். ஒரு நடிகர் என்பதற்காக அவர் மொத்த பொறுப்பையும் ஏற்க முடியுமா?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். பின்னர் அல்லு அர்ஜுனுக்கு 4 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்