தெலங்கானா மாநிலம் கர்னூலில் திருமணமான 5 நிமிடத்தில் மணப்பெண் திடீர் மரணம்

By என்.மகேஷ் குமார்

திருமணமான 5 நிமிடத்தில் மணப்பெண் உயிரிழந்தார். இதனால் திருமண வீடே சோகமயமானது.

தெலங்கானா மாநிலம், கர்னூல் மாவட்டம், அச்சம்பேட்டை பகுதியில் உள்ள மஹேந்திர நகரில் உள்ள பெண் வீட்டில் நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த மணமகனுக்கும், மணமகள் புஜ்ஜி (23) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தை தொடர்ந்து புதுமண தம்பதியினர் அம்மி மிதித்து, அருந்ததி நட்சத்திரத்தை பார்க்கும்போது திடீரென மணப்பெண் புஜ்ஜி, மயங்கி விழுந்தார். இதைக் கண்டு அவரது பெற்றோர், உறவினர், கணவர் ஆகியோர் அவரை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் புஜ்ஜி ஏற்கெனவே இறந்து விட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த துயர செய்தியைக் கேட்டு மணமகன் குடும்பத்தார் உட்பட உறவினர்கள் அனைவரும் கதறி அழுதனர். சற்று முன்வரை கலகலப்பாக இருந்த திருமண வீடு சோகமயமானது.

தகவல் அறிந்த போலீஸார் புகாரின் பேரில் மணமகளின் சடலத்தை உடனடியாக கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர் கர்னூல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே புஜ்ஜி இறந்தற்கான உண்மை காரணம் தெரியவரும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்