புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை தனித்தே எதிர்கொள்ளப் போவதாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆம் ஆத்மி வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்ளக் கூடும் என்ற ஊகங்கள் எழுந்த நிலையில் அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கேஜ்ரிவால் தனித்துப் போட்டி என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தனது சொந்த பலத்தைக் கொண்டு தனித்து தேர்தலை எதிர்கொள்ளும். காங்கிரஸுடன் கூட்டணி அமைய வாய்ப்பில்லை” என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த அடி.. முன்னதாக நேற்று டெல்லி சீலாம்பூர் தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ அப்துல் ரஹ்மான் அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஆம் ஆத்மியில் முஸ்லிம்களின் உரிமைகள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி அவர் கட்சியிலிருந்து விலகினார். இது ஆம் ஆத்மி கட்சிக்கு மற்றுமொரு அடியாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை, தனித்தே போட்டி என்று கேஜ்ரிவால் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் வாசிக்க>> கேஜ்ரிவாலுக்கு அடுத்தடுத்து ‘அடி’... டெல்லியில் ‘வீக்’ ஆகிறதா ஆம் ஆத்மி?
மூன்றாவது முறைக்காக.. டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. பாஜக 8 தொகுதிகளில் வென்றது, காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை.
» வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிறைவு விழா: முதல்வர் ஸ்டாலின் இன்று கேரளா பயணம்
» 55% ட்ரோன்களை அழிக்கும் திறன் வாய்ந்த உள்நாட்டு துப்பாக்கிகள்: அமித் ஷா பெருமிதம்
இந்நிலையில் டெல்லி சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக மற்றும் காங்கிரஸுக்கு எதிராக களத்தில் நிற்கும் ஆம் ஆத்மி கட்சி, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைக்க கடுமையாக உழைத்து வருகிறது.
31 வேட்பாளர்கள் அறிவிப்பு: அந்த வகையில் இப்போதே முதலே தேர்தல் ஆயத்தப் பணிகளைத் தொடங்கியுள்ள ஆம் ஆத்மி கட்சி, முதல் வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கடந்த மாதம் 21-ம் தேதி வெளியிட்டது. அதில் 11 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.தொடர்ந்து 2-வது வேட்பாளர் பட்டியல் நேற்று முன் தினம் வெளியிடப்பட்டது. இதில் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட 20 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. பத்பர்கன்ஜ் தொகுதி எம்எல்ஏவாக இருக்கும், மணீஷ் சிசோடியா வரும் தேர்தலில் ஜங்புரா தொகுதி வேட்பாளராக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வாக்குறுதி.. வேட்பாளர்கள் அறிவிப்போடு நின்றுவிடாமல், டெல்லி சட்டப்பேரவைக்குத் தேர்தலை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 5 வாக்குறுதிகளை அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "1. ஒவ்வொரு ஆட்டோ ஓட்டுநருக்கும் ரூ. 10 லட்சம் வரை ஆயுள் காப்பீடும் ரூ.5 லட்சம் விபத்துக் காப்பீடும் வழங்கப்படும். 2. ஆட்டோ ஓட்டுநர்களின் மகள்களின் திருமணத்திற்காக ரூ. 1 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும். 3. ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைப் படியாக ஆண்டுக்கு இருமுறை ரூ. 2,500 வழங்கப்படும்.
4. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் அவர்களின் குழந்தைகளுக்கான பயிற்சிக்கான செலவை அரசே ஏற்கும். 5. சவாரிக்கு முன்பதிவு செய்து அழைக்க உதவும் ‘Ask App’ செயலி மீண்டும் தொடங்கப்படும்" என தெரிவித்துள்ளார். மேலும் அவர், நாங்கள் முன்பும் அவர்களுடன் நின்றோம், எதிர்காலத்திலும் அவர்களுடன் நிற்போம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
21 hours ago