புதுடெல்லி: கல்வியறிவு குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மக்களவையில் மத்திய அமைச்சர் ஜெயந்த் சவுத்திரி கூறியதாவது: கிராமங்களில் கல்வியறிவு பெற்றவர்கள் கடந்த 2011-ம் ஆண்டில் 67.77 சதவீதமாக இருந்தது. இது 2023-24-ம் ஆண்டில் 77.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. கல்வியறிவு பெற்ற பெண்களின் விகிதம் இதே காலத்தில் 57.93 சதவீதத்திலிருந்து 70.4 %-ஆக அதிகரித்துள்ளது. கல்வியறிவு பெற்ற ஆண்களின் சதவீதமும் 77.15 சதவீதத்திலிருந்து 84.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கிராமங்களில் கல்வியறிவு பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க சமக்ர சிக்ஷா திட்டம், சாக்ஸர் பாரத், பதானா லிகானா திட்டம், யுஎல்எல்ஏஎஸ் - நவ் பாரத் சாக்ஸரத்தா நிகழ்ச்சி ஆகியவற்றை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டங்கள் கல்வியறிவில் பின்தங்கியுள்ள கிராமங்களில் நல்ல பலனை அளித்துள்ளது. ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் கல்வியறிவு தேர்வுகளில் பங்கேற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
21 hours ago