புதுடெல்லி: மாநிலங்களவைத் தலைவர் ஜெக்தீப் தன்கருக்கு எதிராக இண்டியா கூட்டணி எம்பிக்கள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம், அவரது பதவிக்கு அவமரியாதை ஏற்படுத்தும் செயல் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கடுமையாக சாடியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ராஜ்யசபா, மாநிலங்களவைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்காக எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் வழங்கி இருப்பது கண்டிக்கத்தக்கது. இது மாநிலங்களவைத் தலைவரின் பதவிக்கு அவமரியாதை ஏற்படுத்தும் செயல். குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் எளிய பின்னணியில் இருந்து வந்தவர்.
நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எப்போதும் விவசாயிகள் மற்றும் மக்கள் நலன் பற்றி அவர் பேசுகிறார். அவர் நம்மை வழிநடத்துகிறார். நாங்கள் அவரை மதிக்கிறோம். வழங்கப்பட்டுள்ள நோட்டீசில் கையெழுத்திட்ட அந்த 60 எம்.பி.க்களின் நடவடிக்கையை கண்டிக்கிறேன். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளது. மாநிலங்களவைத் தலைவர் மீது நாங்கள் அனைவரும் நம்பிக்கை வைத்துள்ளோம். அவர் சபையை வழிநடத்தும் விதத்தில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
ஜார்ஜ் சோரஸுக்கும் காங்கிரஸ் தலைமைக்கும் இடையே 'கூட்டணி' என்ற செய்திகளும், அவர்களின் ஒருங்கிணைந்த இந்திய விரோதப் பணிகளும் வெளிச்சத்துக்கு வந்திருக்கும் நேரத்தில் - காங்கிரஸும் அதன் நண்பர்களும் கலக்கமடைந்துள்ளனர். காங்கிரஸ் தலைமை நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த விவகாரத்தில் ஒட்டுமொத்த நாடும் கவலை அடைந்துள்ளது" என தெரிவித்துள்ளார்.
» மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் பணியாளர் இல்லாத மாவட்டங்களின் எண்ணிக்கை 249 - மத்திய அரசு தகவல்
» டெல்லி தேர்தல்: ரூ.10 லட்சம் வரை காப்பீடு உள்பட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கேஜ்ரிவால் 5 வாக்குறுதி
முன்னதாக, மாநிலங்களவைத் தலைவர் ஜெக்தீப் தன்கருக்கு எதிராக இண்டியா கூட்டணி எம்பிக்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான நோட்டீஸ் அளித்துள்ளனர். இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “இண்டியா கூட்டணியைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளும் மாநிலங்களவைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளன. மாநிலங்களவையை மிகவும் ஒரு சார்பாக நடத்தும் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சமர்ப்பிப்பதைத் தவிர வேறு வழியில்லை.
இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இது மிகவும் வேதனையான முடிவு. ஆனால் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் நலன்களுக்காக இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டியிருந்தது. இதற்கான முன்மொழிதல் மாநிலங்களவை பொதுச் செயலரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இண்டியா கூட்டணியைச் சேர்ந்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து, மாநிலங்களவைத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஒருமனதாக ஆமோதித்துள்ளன. அவர் மிகவும் கவுரவமான தலைவர், மிகவும் கற்றறிந்த தலைவர், மிகவும் புலமை வாய்ந்த தலைவர், நன்கு அறியப்பட்ட அரசியலமைப்பு வழக்கறிஞர், ஆளுநராக இருந்தவர், மிகவும் மூத்தவர், நாங்கள் மதிக்கும் மனிதர், தனிப்பட்ட முறையில் நானும் அவருடன் சிறந்த உறவை பேணுகிறேன்.
ஆனால், 72 ஆண்டு கால சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் முறையாக இப்படி ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மாநிலங்களவையை அவர் (ஜக்தீப் தன்கர்) நடத்தும் விதம், அவர் ஒரு சார்புடையவர் என்ற எண்ணத்தை எங்களுக்கு ஏற்படுத்துகிறது. எங்கள் மூத்த தலைவர்களுக்கு எதிராக மிகவும் ஆட்சேபனைக்குரிய மொழியில் குற்றச்சாட்டுகளை முன்வரிசை ஆளும் கட்சி எம்பிக்கள் முன்வைப்பதற்கு அவர் அனுமதிக்கிறார். இதன்மூலம் அவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்” என குற்றம் சாட்டி இருந்தார்.
245 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சுமார் 108 உறுப்பினர்களும், இண்டியா கூட்டணிக்கு சுமார் 82 உறுப்பினர்களும் உள்ளனர். அதிமுக, ஒய்எஸ்ஆர்சிபி, பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகள் முக்கியமான விஷயங்களில் அரசுக்கு அடிக்கடி ஆதரவளிக்கின்றன. எனவே, இந்த தீர்மானம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
21 hours ago