உத்தராகண்ட் மாநிலத்தில் ஆம்புலன்ஸுக்கு பணம் இல்லாததால் தம்பியின் உடலை கார் மேற்கூரையில் கொண்டு சென்ற அக்கா

By செய்திப்பிரிவு

டேராடூன்: உத்தராகண்டில், ஆம்புலன்ஸுக்கு பணம் இல்லாததால் தம்பியின் உடலை வாடகை காரின் மேற்கூரையில் வைத்து அவரது அக்கா வீட்டுக்கு கொண்டு சென்றார். இதுகுறித்து விசாரணை நடத்த முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார்.

உத்தராகண்டின் பித்தோரகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்த் பிரசாத். இவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். வயது முதுமை காரணமாக கோவிந்த் பிரசாத் வீட்டில் ஓய்வெடுக்கிறார். மூத்த மகள் ஷிவானி, உத்தராகண்டின் ஹால்டுகார் பகுதியில் உள்ள நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். அவரது ஊதியத்தில் குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தம்பி அபிஷேக் குமாரை (20), தான் பணியாற்றிய அதே நிறுவனத்தில் ஷிவானி பணியில் சேர்த்தார். அக்காவும் தம்பியும் வாடகை வீட்டில் தங்கியிருந்து ஒரே நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று வந்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை ஷிவானியும் அபிஷேக் குமாரும் வழக்கம்போல வேலைக்கு சென்றனர். சுமார் ஒரு மணி நேரம் பணியாற்றிய அபிஷேக் குமார் உடல்நலக் குறைவு காரணமாக வீடு திரும்பினார். மதியம் 2.30 மணிக்கு ரயில்வே தண்டவாளத்தில் அவர் மயங்கி கிடந்தார்.

போலீஸார் அவரை மீட்டு, ஷிவானிக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ஷிவானி, தம்பியை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அபிஷேக் குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

கடந்த சனிக்கிழமை உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஷிவானிடம் ஒப்படைக்கப்பட்டது. தம்பியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் அவர் உதவி கோரினார். ஆனால் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி இல்லை என்று ஊழியர்கள் கைவிரித்தனர்.

இதைத் தொடர்ந்து தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடம் ஷிவானி உதவி கோரினார். ஆனால் அவர்கள் ரூ.12,000-க்கும் அதிகமாக வாடகை கேட்டனர். ஷிவானிடம் அந்த அளவுக்கு பணம் இல்லை. இறுதியில் தனது சொந்த ஊரை சேர்ந்த வாடகை கார் ஓட்டுநரிடம் அவர் தகவல் தெரிவித்தார். அந்த ஓட்டுநர், ஹால்டுகார் பகுதிக்கு வந்து அபிஷேக் குமாரின் உடலை காரின் மேற்கூரையில் கயிறு மூலம் கட்டி ஊருக்கு கொண்டு சென்றார். இந்த வீடியோ, புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து ஷிவானி கூறும்போது, “எனது தம்பி விஷம் குடித்து உயிரிழந்திருப்பதாக மருத்துவர்கள் கூறினர். உடலை வீட்டுக்கு கொண்டு செல்ல மருத்துவமனை சார்பில் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தரவில்லை. தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் அதிக பணம் கேட்டனர். என்னிடம் அந்த அளவுக்கு பணம் இல்லை. இறுதியில் எங்கள் ஊரை சேர்ந்த வாடகை கார் ஓட்டுநரின் உதவியுடன் தம்பியின் உடலை வீட்டுக்கு கொண்டு வந்தேன்" என்று தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து உயர் நிலை விசாரணை நடத்த உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டு உள்ளார். இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் குமார் கூறும்போது, “தவறு இழைத்த அதிகாரிகள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

34 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்