புதுடெல்லி: பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு எந்த வழிகாட்டுதலும் வழங்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்து மூலம் அளித்த பதிலில், “பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு எந்த வழிகாட்டுதலும் வழங்கப்படவில்லை” என கூறியுள்ளார்.
மற்றொரு துணை கேள்விக்கு அவர் அளித்த பதிலில், “அரசியலமைப்பின் சிற்பியான பி.ஆர்.அம்பேத்கர், அரசியலமைப்பு நிர்ணய சபையில் இது தொடர்பான விதிமுறையை முன்மொழிந்தபோது, மனித உறவின் ஒவ்வொரு அம்சத்தையும் உள்ளடக்கிய ஒரு சீரான சட்டத் தொகுப்பு நாட்டில் உள்ளது என்று கூறியிருந்தார்” என கூறியுள்ளார்.
நாட்டில் உள்ள அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்துவதுதான் பொது சிவில் சட்டம். இதன்படி, திருமணம், சொத்துரிமை, வாரிசுரிமை ஆகியவை அனைத்து மதத்தினருக்கும் பொதுவானதாக இருக்கும். இந்த சட்டத்தை அமல்படுத்துவதுதான் பாஜகவின் நோக்கம். ஆனால், இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
» இண்டியா கூட்டணிக்கு தலைமையேற்க தயார்: மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு
» வங்கதேசத்தில் இஸ்கான் மையத்துக்கு விஷமிகள் தீ வைப்பு; சிலைகள் எரிந்து நாசம்
முக்கிய செய்திகள்
இந்தியா
28 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago