இண்டியா கூட்டணிக்கு தலைமையேற்க தயார்: மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: இண்டியா கூட்டணிக்கு தலைமையேற்கத் தயார் என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

கடந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை (என்டிஏ) எதிர்க்க தேசிய கட்சியான காங்கிரஸை முன்னிறுத்தி மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டது இண்டியா கூட்டணி. திமுக, ஆம் ஆத்மி, திரிணமுல் காங்கிரஸ், ஜேஎம்எம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என மாநிலத்தில் ஆளும் கட்சிகள் பல இதில் அங்கம் வகிக்கின்றன.

ஆனால், இண்டியா கூட்டணி தொடங்கப்பட்டதில் இருந்தே பல்வேறு கூட்டணி பிரச்சினைகளும் இருந்து வந்தன. கூட்டணியை ஒன்று சேர்ப்பதில் முக்கிய பங்கு வகித்த பிஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் கடைசி நேரத்தில் பாஜக கூட்டணியில் சேர்ந்தார். டெல்லி, பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிட்டது.

மேலும், மேற்கு வங்கத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி இண்டியா கூட்டணியில் அங்கம் வகித்தாலும் கூட்டணி விவகாரங்களில் பிடிகொடுக்காமல், மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிட்டார்.

ஆனால், மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இண்டியா கூட்டணி 239 இடங்களில் வெர்றி பெற்றது.

இந்நிலையில், தற்போது இண்டியா கூட்டணிக்குத் தலையேற்கத் தயார் என்று மம்தா பானர்ஜி நேற்று அறிவித்தார்.

இதுகுறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: நான் இண்டியா கூட்டணியை உருவாக்கினேன். ஆனால், அவர்களால் [எதிர்க்கட்சித் தலைவர்கள்] அதை ஒன்றாக வைத்திருக்க முடியவில்லை. நான் என்ன செய்வது? நான் இண்டியா கூட்டணிக்குத் தலைமை தாங்கவில்லை.

கூட்டணியின் தலைவர்கள் அனைவரும் ஒன்றாக இருப்பதைப் பார்க்க வேண்டும். அவர்கள் என்னைப் பொருட்படுத்துவதே இல்லை, ஆனால் நான் அனைத்து தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளுடனும் சிறந்த உறவைப் பேணி வருகிறேன்.

வாய்ப்பு கிடைத்தால் இண்டியா கூட்டணியின் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்வேன். இண்டியா கூட்டணிக்குத் தலைமையேற்கத் தயார். நான் மேற்கு வங்கத்துக்கு வெளியே செல்ல விரும்பவில்லை, ஆனால் நான் மேற்கு வங்கத்தில் இருந்தே கூட்டணியை இயக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வங்கதேச விவகாரம்: வங்கதேச எல்லையை அதிக அளவில் பகிர்ந்துகொள்ளும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: பலவீனமான நிர்வாகத்தின் கீழ் செழித்து வளரும் மாபியா கும்பலால் வங்கதேசம் தலைமை அற்றதாக விளங்குகிறது. மேற்கு வங்க எல்லையில் ஒருவர் தீயை பற்ற வைத்தால் அது பிஹார், ஒடிசா மாநிலம் வரை பரவி விடு கிறது. பக்கத்து நாடுகளில் வசிக் கும் அனைவரும் அமைதியாக வாழ வேண்டும் என நான் விரும் புகிறேன்.

மத்திய அரசு வங்கதேச அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அங்கு வசிக்கும் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக் கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரி வித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்