கூகுள் மேப் சொன்ன வழி.. கோவாவுக்கு பதில் கர்நாடகா வனப்பகுதியில் சிக்கிய குடும்பம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிஹாரில் இருந்து கோவாவுக்கு கூகுள் மேப் உதவியுடன் சென்ற குடும்பம் ஒன்று, தவறுதலாக கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் சிக்கிக் கொண்டனர். அதைத் தொடர்ந்து உள்ளூர் போலீஸார் அவர்களை காட்டில் இருந்து பாதுகாப்பாக மீட்டனர்.

பிஹாரில் வசித்து வரும் குடும்பம் ஒன்று காரில் கோவாவுக்கு கூகுள் மேப் உதவியுடன் சென்றுள்ளது. அப்போது கூகுள் மேப் தவறாக வழியை காண்பித்ததாக தெரிகிறது. இந்நிலையில், அவர்கள் கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் சிக்கிக் கொண்டனர். அடர்ந்த காடு என்பதால், மொபைல் நெட்வொர்க்கும் வேலை செய்யவில்லை. இரவு நேரம் என்பதால், அவர்களுக்கு என்ன செய்வதென்று அறியாமல் அச்சமடைந்துள்ளனர். அதோடு, காரிலேயே இரவைக் கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. குழந்தைகள் உட்பட ஆறு-ஏழு பேர் அக்காரில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விடியற்காலையில், மொபைல் நெட்வொர்க் உள்ள இடத்தைக் கண்டுபிடிக்க அவர்கள் 4 கிலோமீட்டர் நடந்து சென்றுள்ளனர். பின்னர் அவசர உதவி எண் 112-ஐ தொடர்புகொண்டு, விவரத்தை தெரிவித்துள்ளர். அதைத் தொடர்ந்து உள்ளூர் போலீஸார் அவர்களை காட்டில் இருந்து பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் கூகுள் மேப்பைப் பின்தொடர்ந்ததாகவும், இந்த சம்பவம் பரேலி - பிலிபித் நெடுஞ்சாலையில் நடந்ததாகவும் கூறுகின்றனர். முன்னதாக, நவம்பர் 24 அன்று உத்தரப் பிரதேசம், பரேலியில் இது போன்று கூகுள் மேப், காட்டிய பாதையில் சென்று கட்டிமுடிக்கப்படாத மேம்பாலத்திலிருந்து 3 பேர் விழுந்து உயிரிழந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 mins ago

இந்தியா

22 mins ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்