கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற தலித் அல்லாத மனைவியின் குழந்தைக்கு எஸ்சி சாதி சான்றிதழ்: உச்ச நீதிமன்றம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தலித் கணவரிடமிருந்து விவாகரத்து கோரும் நிலையில், தலித் அல்லாத அவரின் மனைவியின் பராமரிப்பில் வளரும் அவர்களது குழந்தைகளுக்கு எஸ்சி சாதிச் சான்றிதழை வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இந்த உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர்.

ஜுஹி போரியா நீ ஜவால்கர் மற்றும் பிரதீப் போரியா தம்பதியினர் விவாகரத்து கோரி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குநீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

தலித் சமூகத்தை சாராத பெண் தலித் சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்துகொள்வதன் மூலமாக அவர் அந்த உரிமையை கோர முடியாது. பிறப்பால் சாதி தீர்மானிக்கப்படுகிறது என்பதில் எந்த சர்ச்சையும் இருக்க முடியாது என்பதை இந்த நீதிமன்றம் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது.

கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளாக அவர்களது 11 வயது மகன் மற்றும் 6 வயது மகள் ராய்பூரில் உள்ள தலித் அல்லாத அவர்களது அம்மாவின் பெற்றோர் வீட்டில் வளர்ந்து வருகின்றனர். எனவே அவர்களது அப்பா தலித் சமூகத்தை சார்ந்தவர் என்பதால் அவர்களுக்கான உரிமையை அந்த தம்பதியினர் விவாகரத்து பெற்றாலும் மறுக்க முடியாது.

எனவே, அந்த தம்பதியினருக்கு விவாகரத்து வழங்கப்படுவதுடன், தலித் அல்லாத மனைவியின் வீட்டில் வசிக்கும் அவரின் பிள்ளைகளுக்கு எஸ்சி சாதிச் சான்றிதழை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 6 மாதங்களுக்குள் வழங்க உத்தரவிடப்படுகிறது. குழந்தைகளின் படிப்பு வேலைவாய்ப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு 142 சட்டப் பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்துக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

மேலும், குழந்தைகள் வளரும் வரை அவர்களது படிப்பு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அவரது தந்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்