ராஜஸ்தான் கோயில் உண்டியலில் 1 கிலோ தங்க பிஸ்கட், ரூ.23 கோடி ரொக்கம்!

By செய்திப்பிரிவு

சித்தோகர்: ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஒரு கோயிலில் ஒரு கிலோ தங்க பிஸ்கட், ரூ.23 கோடி ரொக்கம் ஆகியவற்றை பக்தர்கள் நேர்த்திக்கடனாக உண்டியலில் செலுத்தியுள்ள செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ராஜஸ்தான் மாநிலம் சித்தோகர் மாவட்டத்தில் சன்வாலியா சேத் என்ற புகழ்பெற்ற கிருஷ்ணர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியல் நிரம்பிய நிலையில் அண்மையில் திறக்கப்பட்டது. அதில் இருந்த ரொக்கம், நகைகளை கணக்கிடும் பணி நடைபெற்றது. அப்போது 1 கிலோ எடையுள்ள தங்க பிஸ்கெட், ரூ.23 கோடி ரொக்கம், வெள்ளியால் செய்யப்பட்ட துப்பாக்கி, வெள்ளியால் செய்யப்பட்ட கைவிலங்கு ஆகியவற்றை பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கியது தெரியவந்தது.

மேலும் ஏராளமான பக்தர்கள் சிறிய அளவிலான தங்க பிஸ்கட்டுகளையும் கோயில் உண்டியலில் செலுத்தியிருந்தனர். அதுமட்டுமல்லாமல் பக்தர்கள் வெள்ளியால் ஆன பொருட்கள் பலவற்றையும் நேர்த்திக் கடனாக உண்டியலில் செலுத்தியிருந்தனர். இந்தக் கோயில் சித்தோகர்-உதய்பூர் நெடுஞ்சாலையில், சித்தோகர் நகரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கோயிலில் பக்தர்கள் ஒரு கிலோ தங்க பிஸ்கட், ரூ.23 கோடி ரொக்கம் ஆகியவற்றை நேர்த்திக்கடனா வழங்கிய செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்