புதுடெல்லி: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை ‘மிக மோசமான துரோகி’ என்று குற்றம் சாட்டிய பாஜக எம்பி சம்பித் பத்ராவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி காங்கிரஸ் எம்பி ஹிபி ஈடன், சபாநாயகருக்கு நோட்டீஸ் அளித்துள்ளார்.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஹிபி ஈடன் எழுதிய கடிதத்தில், “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை மிக மோசமான துரோகி என மக்களவை உறுப்பினரான சம்பித் பத்ரா கடுமையாக விமர்சித்துள்ளார். இது ராகுல் காந்தியை அவமதிக்கக்கூடியது. மிக மோசமான வார்த்தைப் பிரயோகம். இதன்மூலம் அவர் சட்ட விதிகளை மீறியுள்ளார். எனவே சம்பித் பத்ராவுக்கு எதிராக மக்களவையில் உரிமை மீறல் பிரச்சினையை எழுப்பி, உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.” என தெரிவித்துள்ளார்.
சம்பித் பத்ரா பேசியது என்ன?: நேற்று (டிச. 5) செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்பி சம்பத் பத்ரா, “ஓசிசிஆர்பி ( குற்றம் மற்றும் ஊழல் அறிக்கை திட்டம்) என்ற புலனாய்வு ஊடக அமைப்பில், பல நாடுகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்கள் இணைந்துள்ளன. ஓசிசிஆர்பி தனது பணிக்கான நிதிக்கு கோடீஸ்வர முதலீட்டாளர் ஜார்ஜ் சோரஸ் மற்றும் அமெரிக்காவில் உள்ள ‘டீப் ஸ்டேட்’ முகமைகளை சார்ந்துள்ளது.
வெளியில் இருந்து 70 சதவீத நிதியைப் பெறும் இந்த புலனாய்வு ஊடக அமைப்பால் நடுநிலையாக செயல்பட முடியாது. இந்த ஓசிசிஆர்பியின் செய்திகளை அடிப்படையாக வைத்துதான், பிரதமர் மோடி தலைமையிலான அரசை விமர்சிக்க ராகுல் காந்தி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துகிறார்.
» அம்பேத்கர் நினைவு நாள்: குடியரசு துணை தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை
» நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணிக்கு தயாராகும் விவசாயிகள்: டெல்லியில் போலீஸார் குவிப்பு
இந்தியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து 324 மில்லியன் டாலர் மதிப்பில் கோவாக்சின் மற்றும் கரோனா தடுப்பு ஊசி மருந்துகளை வாங்கும் ஆர்டரை பிரேசில் ரத்து செய்துவிட்டதாக ஓசிசிஆர்பி கடந்த 2021 ஜூலையில் செய்தி வெளியிட்டது. இந்த ஆர்டர் 2021 ஜூன் மாதமே ரத்தாகிவிட்டாலும், இந்த செய்தியை அடிப்படையாக வைத்து ராகுல் காந்தி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். இது நாட்டின் புகழை கெடுக்கும் முயற்சி.
ஓசிசிஆர்பி செய்தி அடிப்படையில்தான் பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரத்தையும் ராகுல் காந்தி எழுப்பினார். இந்திய சந்தையை சீர்குலைக்கும் நோக்கில் ஓசிசிஆர்பி செய்தி வெளியிட்டது. நேசனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்திக்கு எதிரான நடவடிக்கையை அரசியல் உள்நோக்கம் கொண்டது என ஓசிசிஆர்பி செய்தி வெளியிட்டது. ஓசிசிஆர்பி மற்றும் ராகுல் காந்தியும் ஈருடல் ஓருயிர் போல் தெரிகிறது.
ராகுல் காந்தி சிலருடன் சேர்ந்து நாட்டு நலனுக்கு எதிராக செயல்படுகிறார். இந்தியா முன்னேற ராகுல் விரும்பவில்லை. நாடாளுமன்றம் செயல்பட அவர் விரும்பவில்லை. நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறும்போதெல்லாம், ஓசிசிஆர்பியில் நாட்டுக்கு எதிரான செய்திகள் வெளியிடப்படுகின்றன. அந்த போலி செய்திகளை வைத்து நாடாளுமன்றத்தை காங்கிரஸ் முடக்குகிறது.
போராட்டம் நடத்துவதற்கு பதில், பாஜகவுடன் விவாதத்தில் காங்கிரஸ் ஈடுபடலாம். நாட்டுக்கு எதிரான சக்திகள் இரவு, பகலாக செயல்படுகின்றன. காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சிகளும் நாடாளுமன்றத்தை முடக்குகின்றன. சர்வதேச சக்திகளுடன் இணைந்து நாட்டை சீர்குலைக்க முயற்சிக்கும் ராகுல் காந்தி மிக மோசமான துரோகி. பிரதமர் மோடி தனது பணிகளால் மக்கள் மனதில் வாழ்கிறார். மக்களை முட்டாளாக்கும் ராகுல் காந்தியின் முயற்சி பலிக்காது.” என்று கூறி இருந்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago