மகாராஷ்டிர முதல்வராக பட்னாவிஸ் பதவியேற்பு: துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் பதவியேற்றனர்

By செய்திப்பிரிவு

மும்பை: மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றுக் கொண்டார். ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர். பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணிக்கு 230 இடங்கள் கிடைத்தன. பாஜக தனித்து 132 இடங்களை கைப்பற்றியது.

முதல்வர் பதவி விவகாரத்தால் புதிய அரசு பதவியேற்பதில் தாமதம் ஏற்பட்டது. பல்வேறு திருப்பங்களுக்கு பிறகு, பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் மும்பையில் கடந்த 4ம் தேதி நடைபெற்றது. இதில் பாஜக சட்டப்பேரவை குழு தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டார். அவர் முதல்வராக பதவியேற்க பாஜக மத்திய குழு ஒப்புதல் அளித்தது.

இதைத் தொடர்ந்து, அன்றைய தினமே ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்த பட்னாவிஸ், ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆளுநரும் இதை ஏற்றுக் கொண்டு, ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.

திட்டமிட்டபடி, மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் நேற்று மாலை பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில், மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பட்னாவிஸ் 3-வது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ளார்.

ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

விழாவில் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. உள்துறை உள்ளிட்ட சில இலாகாக்கள் ஒதுக்கீட்டில் கூட்டணி கட்சிகள் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதால், அமைச்சரவை பின்னர் விரிவாக்கம் செய்யப்படும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாஜக கூட்டணி அரசு பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். புதிய முதல்வராக பதவியேற்ற பட்னாவிஸ், துணை முதல்வர்கள் ஷிண்டே, அஜித் பவார் ஆகி யோருக்கு அவர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா, நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சவுகான், பியூஷ் கோயல், ஜோதிர் ஆதித்ய சிந்தியா, குமாரசாமி, ராம்தாஸ் அத்வாலே உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

யோகி ஆதித்யநாத் (உத்தர பிரதேசம்). சந்திரபாபு நாயுடு (ஆந்திரா), நிதிஷ் குமார் (பிஹார்). பூபேந்திர படேல் (குஜராத்), ஹிமந்த பிஸ்வா சர்மா (அசாம்), பிரமோத் சாவந்த் (கோவா) உட்பட பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்களும் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

முகேஷ் அம்பானி, சச்சின் பங்கேற்பு: தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, நோயல் டாடா, குமாரமங்கலம் பிர்லா, கீதாஞ்சலி கிர்லோஸ்கர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான், சஞ்சய் தத், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட திரை, விளையாட்டு துறை நட்சத்திரங்களும் விழாவில் கலந்து கொண்டனர். பதவியேற்பு விழா நடைபெற்ற ஆசாத் மைதானத்தில் 42,000-க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர்.

புதுக்கோட்டை தமிழ்ச்செல்வன் அமைச்சராக வாய்ப்பு: மும்பை சைன் கோலிவாடா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட கேப்டன் ஆர்.தமிழ்ச்செல்வன் 73,429 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் கடந்த 2014 முதல் இத்தொகுதி எம்எல்ஏவாக பதவி வகிக்கிறார்.

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அடுத்த பிலாவிடுதி கிராமத்தை பூர்வீகமாக கொண்ட தமிழ்ச்செல்வன், துபாய் வேலைக்காக ஏஜென்ட் மூலம் மும்பைக்கு சென்றவர். ஏஜென்ட் ஏமாற்றியதால் மும்பையிலேயே நிரந்தரமாக தங்கிய அவர், படிப்படியாக வாழ்க்கையில் உயர்ந்தார். 2008-ம் ஆண்டு தீவிரவாத தாக்குதலின்போது மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் முனையத்தில் குண்டு காயமடைந்த 36 பேரை மருத்துவமனையில் சேர்த்து அவர்களது உயிரை காப்பாற்றினார். முதல்வர் பட்னாவிஸுக்கு நெருக்கமான இவர் அமைச்சரவையில் இடம்பெறுவார் என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்