புதுடெல்லி: சூரியனின் புறவெளி கதிர்களை ஆய்வு செய்வதற்காக, ப்ரோபா-3 எனப்படும் இஎஸ்ஏ நிறுவனத்தின் இரட்டை செயற்கைக்கோள் இன்று (டிச.5) பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) ஓர் அங்கமான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் அமைப்பு மூலமாக வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் வணிகரீதியாக விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சூரியனின் புறவெளி கதிர்களை ஆய்வு செய்வதற்காக ப்ரோபா-3 எனும் இரட்டை செயற்கைக்கோளை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு (இஎஸ்ஏ) நிறுவனம் வடிவமைத்தது. இந்த இரு செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி ராக்கெட் வாயிலாக விண்ணில் நிலைநிறுத்த இஎஸ்ஏ நிறுவனத்துடன், இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் அமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி ப்ரோபா-3 செயற்கைக்கோள்கள், பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலமாக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து இன்று (டிச.5) மாலை 4 மணி அளவில் விண்ணில் ஏவப்பட்டது.
சூரிய ஒளி வட்டத்தை ஆய்வு செய்யும் 'புரோபா-3': ப்ரோபா-3 இரட்டை செயற்கைக்கோள் புவியில் இருந்து 60,500 கி.மீ. தொலைவில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளன. அங்கிருந்தபடியே 2 செயற்கைக்கோள்களும் 150 மீட்டர் இடைவெளியில் அருகருகே பயணித்து சூரியனின் புறவெளிப் பகுதியை ஆய்வு செய்து தரவுகளை அனுப்ப உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
ஐரோப்பிய விஞ்ஞானிகளுடன், இஸ்ரோ விஞ்ஞானிகளும் இணைந்து சூரியனின் ஒளிவட்டம் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். புரோபா-3 விண்கலத்தில் இருக்கும் இரண்டு செயற்கைக்கோள்களும் ஒன்றாக இணைந்து செயல்பட உள்ளன. ஓர் ஆய்வுக்கு இரண்டு செயற்கைக்கோள்கள் ஒரே நேரத்தில் செலுத்தப்படுவது உலகில் இதுவே முதல்முறை. கொரோனாகிராஃப் மற்றும் ஆக்ல்டர் எனும் இவ்விரு செயற்கைக்கோள்களும் சில மில்லிமீட்டர்கள் இடைவெளியில் 144 மீ அல்லது அதற்கு மேற்பட்ட தூரத்தில் இருக்கும். இதன் விளைவாக, இந்த ஜோடி ஒரு மெய்நிகர் ராட்சத செயற்கைக்கோளை போல செயல்படும். மேலும், இது தரையில் இருந்து பெறப்படும் கட்டளைகள் எதுவும் இல்லாமல் தானாகவே இயங்கும்.
» ஜார்க்கண்டில் அமைச்சரவை விரிவாக்கம்: ஹேமந்த் சோரன் அரசில் 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு
புரோபா-3 என்ன ஆய்வு செய்யவுள்ளது? - சூரிய கரோனா (சூரியனின் வளிமண்டலத்தின் வெளிப்புற பகுதி) அதனுடன் தொடர்புடைய பல மர்மங்களைக் கொண்டுள்ளது. சூரிய கரோனா சூரியனின் மேற்பரப்பைவிட ஒரு மில்லியன் டிகிரி வெப்பம் அதிகமாக உள்ளது. இந்தப் பகுதியில் ஏற்படும் கரோனல் வெளிப்பாடு (அதிக சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள்) குறித்து தீவிர ஆய்வு செய்யப்பட உள்ளது. கரோனல் வெளிப்பாடு செயற்கைக்கோள்கள் அல்லது தகவல் தொடர்பு மற்றும் மின் விநியோக கட்டமைப்புகளை பாதிக்கக்கூடியது என்பதால் ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது.
சூரிய கிரகணம்: பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலவு வரும்போது எற்படும் சூரிய கிரகணம் என்பது சூரிய கரோனாவை ஆய்வு செய்ய இயற்கை கொடுத்த வாய்ப்பு ஆகும். ஆனால் கிரகணங்கள் அரிதானவை. சில நிமிடங்களுக்கு மட்டுமே நிகழும். இதனால் சூரிய கரோனாவை நீண்ட காலம் ஆய்வு செய்ய இயலாது. தற்போது விண்ணில் செலுத்தப்படும் ஆக்ல்டர் மற்றும் கரோனாகிராஃப் செயற்கைக்கோள்கள் விண்வெளியில் மிகவும் துல்லியமாக வலம் வந்து ஆய்வு செய்யும்.
இந்தியாவில் இருந்து ஏவப்படுவது ஏன்? - 550 கிலோ எடையுள்ள புரோபா-3-ஐ விண்ணில் செலுத்தக்கூடிய நடுத்தர ராக்கெட் ஐரோப்பிய விண்வெளி அமைப்பிடம் (இஎஸ்ஏ) இல்லை. செயற்கைக்கோள்களின் நிறை இஎஸ்ஏ-வின் வேகா-சி என்ற சிறிய ராக்கெட்டின் திறனைவிட அதிகமாக உள்ளது, அதே நேரத்தில் பெரிய ஏரியன்-6 ராக்கெட் இந்த வகையான பணிக்கு மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். எனவே இஸ்ரோவின் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் புரோபா-3 விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்காக இஸ்ரோவின் வணிகப் பிரிவான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட்டுக்கு இஎஸ்ஏ சார்பில் ரூ. 271 கோடி கட்டணம் செலுத்தப்படுகிறது.
நேற்று ஏவப்பட்டிருக்க வேண்டிய ராக்கெட்: ப்ரோபா-3 செயற்கைக்கோள்கள், பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலம் நேற்று மாலை விண்ணில் ஏவப்பட இருந்தது. ராக்கெட் ஏவுதலுக்கான இறுதிகட்ட பணிகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். கடைசிநேர சோதனைகளில் ப்ரோபா-3 செயற்கைக்கோளில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இதையடுத்து ராக்கெட் ஏவுதலானது இன்று (டிச.5) மாலை 4.12 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
35 mins ago
இந்தியா
42 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago