புதுடெல்லி: “மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே சந்தா’ திட்டத்தின் மூலம் இந்திய ஆராய்ச்சிகள் புது வடிவம் பெறும்” என்று வெளிநாட்டினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த மாதம் 25-ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது, ‘ஒரே நாடு ஒரே சந்தா’ (ஓஎன்ஓஎஸ்) திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி 2025, 2026, 2027 ஆகிய 3 ஆண்டுகளுக்கு இத்திட்டம் அமல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் சுமார் 13,000 இதழ்களை உயர்க் கல்வி பயிலும் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் இலவசமாக படிக்க முடியும்.
» மும்பையில் இன்று பிரம்மாண்ட விழா: முதல்வராக பதவியேற்கிறார் பட்னாவிஸ்
» மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றத்துக்கு வலுவான அடித்தளம் அமைத்துள்ளோம்
சர்வதேச அளவில் அதிக எண்ணிக்கையில் ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. தற்போது உயர்க் கல்வி துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், ஒரே நாடு ஒரே சந்தா (ஓஎன்ஓஎஸ்) திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த திட்டம் 3 ஆண்டுகளுக்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் சர்வதேச அளவில் பிரபல ஆராய்ச்சி இதழ் களை இலவசமாகவே மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் படிக்க முடியும். குறிப்பாக நெதர்லாந்தில் இருந்து வெளிவரும் ‘எல்ஸ்வீர்’, ஜெர்மனியில் இருந்து வெளிவரும் ‘ஸ்பிரின்ஜர் நேச்சர்’, விலே போன்ற 13,000-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி இதழ்களை டிஜிட்டல் தளத்தில் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், உயர்க் கல்வி நிறுவனங்கள் படிக்க முடியும். இதன் மூலம் 18 மில்லியன் மாணவர்கள் பயனடைவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒரே நாடு ஒரே சந்தா திட்டத்துக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்துக்காக சர்வதேச அளவில் 30 வெளியீட்டாளர்களுடன் மத்திய அரசு கடந்த 2 ஆண்டுகளாக தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதன் பலனாக ஒரே டிஜிட்டல் தளத்தில் இருந்து சர்வதேச இதழ்களை மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் படிக்க முடியும். இதன் மூலம் அவர்கள் ஆராய்ச்சிக்காக செலவிடும் தொகை 18 சதவீதம் குறையும். இந்தியாவில் ஆராய்ச்சி மாணவர்களின் எண்ணிக்கையும், ஆராய்ச்சிகளின் தரமும் மேம்படும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே சந்தா திட்டத்தின் பலன்கள், மத்திய அல்லது மாநில அரசு நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும், மத்திய அரசின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களுக்கும், பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) தன்னாட்சி பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தன்னாட்சி மையமான தகவல் மற்றும் நூலக இணைப்பு என்ற மத்திய நிறுவனத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட தேசிய சந்தா மூலம் வழங்கப்படும்.
இத்திட்டத்தை வெளிநாட்டினர் பலர் வரவேற்றுள்ளனர். மத்திய அரசின் திட்டத்தின் மூலம் இந்திய ஆராய்ச்சிகள் புது வடிவம் பெறும். அப்போது ஆராய்ச்சி துறையில் அமெரிக்கா போட்டியாக இருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் ‘ரெட்டிட்’ பயன்படுத்தும் ஒருவர் தனது பதவில், “அறிவை பெறுவது எளிதாகும் போது, அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
“இந்தியா சரியான ஒன்றை செய்துள்ளது” என்று மற்றொருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இருந்து ஜய்டூன் கூறும் போது, “மருத்துவக் கல்வி படிக்கும் போது, இதுபோன்ற ஆராய்ச்சி இதழ்களை படிக்க முடியாமல் கஷ்டப்பட்டிருக்கிறேன். இப்போது அந்த இதழ்களை படிக்க திறந்து விட்டதன் மூலம் அறிவியல், ஆராய்ச்சிக்கு இருந்த பெரும் தடை நீங்கியுள்ளது. இந்திய அரசு மிகப்பெரிய முடிவெடுத்திருக்கிறது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் பயனாளி ஒருவர் கூறும்போது, “பிரதமர் மோடி மற்றும் அவரது அமைச்சரவையை நான் மிகவும் விரும்புகிறேன். இந்திய நாட்டுக்காக அவரும் அவரது அமைச்சரவை யும் செய்து வரும் அரிய பணிகளை பலர் பார்க்காமல் இருப்பது சோகம். 1.5 பில்லியன் மக்கள் தொகை கொண்ட ஒரு தேசத்தை. அதுவும் ஊழல் நிறைந்த, முந்தைய அரசுகள் ஏற்படுத்திவிட்டு சென்ற குழப்பத்தை சமாளிக்கும் விஷயத்தில் மோடியும் அவரது அமைச்சரவையும் முதன்மை உ தாரணங்களாக திகழ்கின்றனர். பிரதமர் மோடி உண்மையில் ஒரு விதிவிலக்கான தலைவர்” என்று தெரிவித்தார்.
“இந்திய அறிவியல் ஆராய்ச்சியை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்லும் முடிவு” என்று இன்னொருவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago