ராகுல் உட்பட 6 காங். எம்.பி.க்கள் சம்பல் பகுதிக்கு இன்று பயணம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் சம்பலில் சமீபத்திய வன்முறையை தொடர்ந்து அங்குள்ள நிலைமையை மதிப்பிடுவதற்காக ராகுல் காந்தி உள்ளிட்ட உ.பி. காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று பயணம் மேற்கொள்கின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் நகரில் முகலாயர் கால மசூதி உள்ளது. இதில் கடந்த 24-ம் தேதி இந்திய தொல்லியல் துறை கள ஆய்வு மேற்கொண்டபோது அங்கு வன்முறை வெடித்தது. இந்து கோயிலை இடித்துவிட்டு அங்கு மசூதி கட்டப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கள ஆய்வுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் சம்பல் வன்முறை, கலவரத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்ட போலீஸார் உட்பட பலர் காயம் அடைந்தனர்.

இந்த நிலையில் சம்பல் வன்முறைக்கு பிறகு அங்கு நிலைமையை மதிப்பிடுவதற்காக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட உ.பி. காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேரும் இன்று சம்பல் செல்கின்றனர். இவர்களுடன் வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தியும் இணைந்துகொள்ள வாய்ப்பிருப்பதாக உ.பி. காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் கூறினார்.

காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் மதியம் 2 மணிக்கு சம்பல் சென்றடைவார்கள் என்று மாநில காங்கிரஸ் நிர்வாகி சச்சின் சவுத்ரி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்