ஆலப்புழா: கேரளாவில் அரசு பேருந்து மீது கார் மோதியதில் 5 எம்பிபிஎஸ் மாணவர்கள் உயிரிழந்தனர். 6 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கேரளாவின் ஆலப்புழாவில் அரசு மருத்துவக் கல்லூரி செயல்படுகிறது. இந்த கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்கள் அருகில் உள்ள விடுதியில் தங்கி உள்ளனர். அவர்களில், முதலாம் ஆண்டு படிக்கும் 11 மாணவர்கள் திங்கள்கிழமை இரவு ஒரே காரில் திரைப்படம் பார்க்க சென்றனர். விடுதியில் இருந்து ஆலப்புழா டவுனில் உள்ள திரையரங்குக்கு அவர்கள் சென்றபோது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. செங்கன்சேரி முக்கு பகுதியில் சென்றபோது எதிரே வந்த அரசு பேருந்து மீது கார் அதிவேகமாக மோதியது.
இதில் கார் முழுவதுமாக நொறுங்கியது. விபத்து குறித்து அறிந்தததும் அருகில் வசித்த மக்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். வெல்டிங் இயந்திரத்தின் உதவியுடன் கார் அறுக்கப்பட்டு மாணவர்கள் மீட்கப்பட்டனர். இந்தக் கோர விபத்தில் காரில் பயணம் செய்த 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மாணவர்கள் ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு 2 மாணவர்கள் உயிரிழந்தனர்.
கோட்டக்கல்லை சேர்ந்த தேவநாதன் (19), பாலக்காட்டை சேர்ந்த ஸ்ரீதேவ் வல்சன் (19), கோட்டயத்தை சேர்ந்த ஆயுஷ் ஷாஜி (19), லட்சத்தீவை சேர்ந்த முகமது இப்ராகிம் (19), கண்ணூரை சேர்ந்த முகமது அப்துல் ஜபார் (19) ஆகியோர் விபத்தில் உயிரிழந்திருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். சைனி டென்ஸ்டன், ஆல்வின் ஜார்ஜ், கிருஷ்ணதேவ், கவுரி சங்கர், முகமது, ஆனந்த் மனு ஆகிய 6 எம்பிபிஎஸ் மாணவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
» நாடாளுமன்றத்தில் மீண்டும் அதானி விவகாரத்தை எழுப்பிய இண்டியா கூட்டணி!
» இந்திய - சீன உறவில் முன்னேற்றம்: மக்களவையில் ஜெய்சங்கர் தகவல்
அரசு பேருந்தில் பயணம் செய்த 15 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. முதலுதவி சிகிச்சைக்கு பின்பு அவர்கள் வீடு திரும்பினர். இதுகுறித்து அரசு பேருந்து ஓட்டுநர் கூறும்போது, “பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால் பேருந்தை மிகவும் மெதுவாக ஓட்டிச் சென்றேன். எதிர்திசையில் அதிவேகமாக வந்த கார் பேருந்து மீது பயங்கரமாக மோதி உருக்குலைந்தது" என்று தெரிவித்தார்.
ஆலப்புழா போலீஸார் கூறும்போது, “திங்கள்கிழமை இரவு ஆலப்புழாவில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது ஒரே காரில் 11 மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். அந்த கார் 14 ஆண்டுகள் பழமையானது. மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவரே, காரை ஓட்டி உள்ளார். கார் மற்றொரு வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோது விபத்து நடந்துள்ளது. அளவுக்கு அதிகமான பயணிகள், பலத்த மழை, இரவில் போதிய வெளிச்சம் இல்லாதது, அதிவேகம் போன்றவை விபத்துக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
பழைய கார் என்பதால் ஏர்பேக் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இல்லை. இதுவும் உயிரிழப்புக்கு மிக முக்கிய காரணமாகும். மருத்துவக் கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவனத்திடம் இருந்து டவேரா காரை வாடகைக்கு எடுத்துள்ளனர். அந்த நிறுவனத்தின் உரிமையாளரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மிகச் சிறிய தவறுகள் பெரும் விபத்து, உயிரிழப்புக்கு காரணமாகி விடுகிறது. இளம் தலைமுறையினர் பொறுப்புடனும் கவனத்துடனும் செயல்பட வேண்டும். இவ்வாறு ஆலப்புழா போலீஸார் தெரிவித்தனர்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “ஆலப்புழா விபத்தில் 5 எம்பிபிஎஸ் மாணவர்கள் உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
பாலக்காட்டை சேர்ந்த ஸ்ரீதேவ் வல்சனின் உறவினர்கள் கூறும்போது, “முதல்முறை நீட் தேர்வில் வல்சனுக்கு போதிய மதிப்பெண் கிடைக்கவில்லை. 2-வது முறை அதிக மதிப்பெண் பெற்று ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். அவர் கல்லூரியில் சேர்ந்து 55 நாட்கள் மட்டுமே ஆகிறது. அதற்குள் விபத்தில் உயிரிழந்துவிட்டார்" என்று கண்ணீர்மல்க கூறினர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago