மீண்டும் அமைச்சராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பணமோசடி வழக்கில் ஜாமீன் பெற்ற செந்தில் பாலாஜி, உடனடியாக தமிழகத்தின் மூத்த கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை (டிச. 2, 2024) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, பலரிடம் போக்குவரத்துத் துறையில் வேலை கிடைக்கச் செய்வதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 26-ம் தேதி ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, செப்டம்பர் 29-ம் தேதி செந்தில் பாலாஜி கேபினெட் அமைச்சராக பதவியேற்றார்.

இந்நிலையில், செந்தில் பாலாஜியால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான வித்யா குமார் என்பவர், செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீன் உத்தரவை திரும்பப் பெறக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.எஸ். ஓகா தலைமையிலான அமர்வு, “இது என்ன? அவர் (செந்தில் பாலாஜி) மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர் உடனடியாக அமைச்சராகி இருக்கிறார். இது நிறுத்தப்பட வேண்டும். சாட்சிகள் அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும் என்ற அச்சத்தை இப்போது நியாயப்படுத்துவார்கள். நீதி வழங்குவது மட்டும் அல்ல, அது வெளிப்படையாக செய்யப்பட வேண்டும் என்பதே அடிப்படைக் கொள்கை.” எனக் குறிப்பிட்டது.

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டபோது அளிக்கப்பட்ட தீர்ப்பில், தண்டனையின் ஒரு வடிவமாக சுதந்திரத்தை தடுக்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதி ஓகா, செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டது பற்றி மட்டுமே இப்போது கவனம் செலுத்தப்படும் என தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த்த லுத்ராவிடம் கூறினார்.

மேலும், “இந்த வழக்கில் வழக்கமான நோட்டீஸ் அனுப்பப்பட மாட்டாது. மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள இப்போது சாட்சிகள் கேபினட் அமைச்சரை எதிர்க்கும் மனநிலையில் இருக்க மாட்டார்கள் என்ற குற்றச்சாட்டை விசாரிக்கும். இந்த வழக்கு டிசம்பர் 13-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.” என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்