அமராவதி: ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், முந்தைய ஆட்சியில் அமைக்கப்பட்ட வக்பு வாரியம் கலைக்கப்படுவதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆந்திர சிறுபான்மையினர் நலத் துறை கடந்த 30-ம் தேதி வெளியிட்ட அரசாணையில், ‘ஆந்திர உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, 11 உறுப்பினர்கள் அடங்கிய வக்பு வாரிய குழுவை அப்போதைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைத்தது. இதுதொடர்பாக, முந்தைய அரசால் கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியிடப்பட்ட அரசாணை திரும்ப பெறப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘உயர் நீதிமன்றத்தின் கருத்துகளை கவனமாக பரிசீலித்து, நல்லாட்சி நிர்வாகத்தை பராமரிக்கவும், வக்பு வாரியத்தின் சொத்துகளை பாதுகாப்பது மற்றும் வக்பு வாரியத்தின் சுமுகமான செயல்பாட்டை உறுதிசெய்யும் நோக்கிலும் அரசாணை திரும்ப பெறப்படுகிறது என்று துறை செயலர் கதி ஹர்ஷ்வர்தன் அதில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் ஃபாரூக் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முந்தைய ஜெகன் மோகன் ஆட்சியில் வக்பு வாரிய உறுப்பினர்கள் நியமனத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த விவகாரத்தில், வக்பு வாரிய தலைவர் தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்ட சிக்கல்கள் காரணமாக வக்பு வாரியத்தின் செயல்பாட்டில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்கவே முந்தைய அரசின் அரசாணையை வாபஸ் பெற்று புதிய அரசாணையை தற்போதைய அரசு வெளியிட்டுள்ளது.
வக்பு சொத்துகளின் பாதுகாப்பு, நிர்வாக மேலாண்மை, சிறுபான்மையினர் நலன் ஆகியவற்றில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணி அரசு உறுதியாக உள்ளது. அதன் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago