நீர்வழி சுற்றுலா திட்டம் மூலம் 2029-ம் ஆண்டுக்குள் 10 லட்சம் பயணிகளை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்வானந்த சோனோவால் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
இப்போது விசாகப்பட்டினம், மர்மகோவா, நியு மங்களூரு, கொச்சி, மும்பை மற்றும் சென்னை ஆகிய 6 முக்கிய துறைமுகங்களில் நீர்வழி சுற்றுலா முனையங்கள் உள்ளன. நீர்வழி சுற்றுலா திட்டத்தின் மூலம் வரும் 2029-ம் ஆண்டுக்குள் 10 லட்சம் பயணிகளை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நீர்வழி சுற்றுலா கப்பல்களை இயக்கும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டினருக்கு உத்தேச வரிவிதிப்பு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது நிதி (எண் 2) சட்டத்தின் (2024) கீழ், வருமான வரி சட்டத்தில் (1961) 44 பிபிசி என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நீர்வழி சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக, பாரத் நீர்வழி சுற்றுலா திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இதன்படி, கடல்வழி சுற்றுலா முனையங்களை 10 ஆக உயர்த்தவும் ஆற்றுவழி சுற்றுலா முனையங்களை 100 உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago