​காங்கிரஸ் கட்சி கேட்டுக் கொண்டால் அசாமில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்க தயார்: முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா உறுதி

By செய்திப்பிரிவு

குவஹாத்தி: அசாம் மாநிலத்​தில் மாட்​டிறைச்சி உண்பது சட்டத்​துக்​குப் புறம்​பானதல்ல. ஆனால், இந்துக்​கள், ஜெயினர்​கள், சீக்​கியர்கள் பெரும்​பான்​மையாக வசிக்​கும் பகுதி​யில் இறைச்​சிக்காக மாடுகளை கொல்​வது, விற்​பது, உண்பது போன்ற​வற்றுக்கு தடை உள்ளது. அசாம் கால்​நடைகள் பாது​காப்புச் சட்டத்​தின் கீழ் இந்த தடை நடைமுறை​யில் உள்ளது.

இந்நிலை​யில், அசாம் மாநிலத்​தின் சமாகுரி சட்டப்​பேர​வைத் தொகு​தி​யில் கடந்த மாதம் இடைத்​தேர்தல் நடைபெற்​றது. இந்தத் தொகு​தி​யில் முஸ்​லிம்​களின் ஆதிக்கம் அதிகம் இருந்​தும் இடைத்​தேர்​தலில் பாஜக வெற்றி பெற்​றது. காங்​கிரஸ் வேட்​பாளர் டன்சில் உசைனை பாஜக வேட்​பாளர் திப்லு ரஞ்சன் சர்மா 24,501 வாக்​குகள் வித்​தி​யாசத்​தில் தோற்​கடித்​தார்.

இந்நிலை​யில், டன்சில் உசைனின் தந்தை​யும் அசாம் துப்ரி மக்களவை தொகுதி காங்​கிரஸ் எம்.பி.​யுமான ரகிபுல் உசைன், “இடைத்​தேர்​தலில் வெற்றி பெற முஸ்​லிம்​களுக்கு பாஜக மாட்​டிறைச்சி வழங்​கியது” என்று குற்றம் சாட்​டி​னார். அதேநேரத்​தில் மாட்​டிறைச்சி உண்பது தவறு என்றும் அவர் கருத்து தெரி​வித்​தார்.

இதுகுறித்து அசாம் பாஜக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று கூறிய​தாவது: அசாமில் எதிர்க்​கட்​சியாக உள்ள காங்​கிரஸ் கட்சி, மாட்​டிறைச்சி விவகாரத்தை எழுப்​பியது மகிழ்ச்​சியாக உள்ளது. கடந்த 25 ஆண்டாக செல்​வாக்​குடன் இருந்த சமாகுரி சட்டப்​பேரவை தொகு​தி​யில் காங்​கிரஸ் தோல்வி அடைந்தது வரலாற்றில் மிகப்​பெரிய அவமானம். இந்தத் தொகு​தி​யில் பாஜக வெற்றி பெற்றது என்பதைவிட காங்​கிரஸ் படுதோல்வி அடைந்தது என்பது​தான் சரி.

இந்த சோகம் ஒரு பக்கம் இருந்​தா​லும், மாட்​டிறைச்சி உண்பது தவறு என்று ரகிபுல் உசைன் ஒரு நல்ல விஷயத்தை பேசி​யிருக்​கிறார். மாட்​டிறைச்​சியை கொடுத்து பாஜக வெற்றி பெற்றது என்று ரகிபுல் உசைன் கூறுகிறார். அப்படி​யானால், கடந்த 25 ஆண்டு​களாக காங்​கிரஸ் கட்சி மாட்​டிறைச்சி கொடுத்​து​தான் வெற்றி பெற்​றதா?

மக்களவை எம்.பி.​யா​வதற்கு முன்னர் சமாகுரி தொகு​தி​யில் 5 முறை எம்எல்​ஏ.வாக ரகிபுல் உசைன்​தானே இருந்​தார். அவர் தொகுதி வாக்​காளர்​களுக்கு மாட்​டிறைச்சி கொடுத்​தாரா? மாட்​டிறைச்சி உண்பது தவறு என்று ரகிபுல் கூறுகிறார். அப்படி​யானால், மாட்​டிறைச்​சியை தடை செய்ய வேண்​டும் என்று அவர் கூறுகிறாரா? மாட்​டிறைச்சி பற்றி காங்​கிரஸோ அல்லது பாஜகவோ பேசவில்லை. ரகிபுல் உசைன் பேசுகிறார். அதை அவர் எழுத்​துப்​பூர்​வமாக தருவாரா? காங்​கிரஸ் கட்சி விரும்​பினால், அசாமில் மாட்​டிறைச்​சிக்கு தடை விதிக்க தயார்.

இதுகுறித்து காங்​கிரஸ் மாநில தலைவர் பூபென் போரா​வுக்கு கடிதம் எழுத போகிறேன். அவர் சொல்​லட்டும். காங்​கிரஸ் எம்.பி. ரகிபுல் உசைன் கூறியது போல் மாட்​டிறைச்சி விவகாரத்​தில் அவருடைய கருத்​தும் காங்​கிரஸுடைய கருத்​தை​யும் அவர் சொல்​லட்டும். அதன்​பிறகு வரும் சட்டப்​பேரவை தொடரிலேயே மாட்​டிறைச்​சிக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுப்​போம். இவ்​வாறு முதல்​வர்​ ஹிமந்​த பிஸ்​வா சர்​மா கூறினார்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்