மதுபானி: பிஹார் மாநிலத்தின் மதுபானி நகரில் வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 50,294 பயனாளிகளுக்கு ரூ.1,121 கோடி மதிப்பில் கடன்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு லட்சாதிபதி சகோதரி இருக்க வேண்டும் என நமது பிரதமர் மோடி விரும்புகிறார். இதற்காக வங்கிகள் பெண்களுக்கு நிதியுதவி அளிக்கின்றன. பிஹாரில் சுயஉதவிக் குழுக்கள் மூலமாக பெண்களுக்கு பயிற்சியும், நிதியுதவியும் அளிக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு தொடங்கியுள்ள திட்டங்களில் ஒவ்வொரு பெண்ணும் பங்குபெற வேண்டும். அப்போது அவர்கள் அதிக திறன் மிக்கவர்களாகவும், அதிகாரமிக்கவர்களாகவும் மாற முடியும். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா இலக்கை அடைய பெண்கள் முக்கிய பங்காற்ற வேண்டும். இந்தியாவின் வளர்ச்சி பெண்களால் நடத்தப்பட வேண்டும் என பிரதமர் மோடி விரும்புகிறார். ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளுக்கு தே.ஜ கூட்டணி அரசு முன்னுரிமை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
13 mins ago
இந்தியா
30 mins ago
இந்தியா
34 mins ago
இந்தியா
50 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago